Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளம்பெண்ணை பார்த்ததும் டெலிவரி பாய் செய்த வேலை.. அடச்சீ.. பார்சல் கொடுக்கபோனபோது ஷாக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பார்சல் டெலிவரி செய்ய சென்ற பிளிங்கிட் நிறுவனத்தின் டெலிவரி பாய், இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டார். இது தொடர்பாக அந்த பெண் நிறுவனத்திடம் புகார் அளித்தபோது நிறுவனம் நம்பவில்லை. இதையடுத்து அந்த பெண், டெலிவரி பாய் செய்த வீடியோவை பகிர்ந்த நிலையில் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தற்போது செல்போன், காய்கறி முதல் உணவு பொருட்களை நாம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் போட்டு வாங்கி வருகிறோம். இந்த பொருட்களை டெலிவரி செய்ய பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதில் ஒன்று தான் பிளிங்கிட் (Blinkit).

Blinkit harassment

இந்நிலையில் தான் பிளிங்கிட் ஊழியர் ஒருவர் பார்சல் டெலிவரி செய்தபோது பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார். பார்சலை கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை பெறும்போது தொடக்கூடாத இடத்தை தொட்டுள்ளார்.

இதுதொடர்பாக அந்த பெண் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் டெலிவரி செய்ய போன பிளிங்கிட் ஊழியர், அந்த பெண்ணிடம் பணம் பெறுகிறார். இந்த சமயத்தில் தொடக்கூடாத இடத்தை அந்த ஊழியர் தொடுகிறார். பயந்துபோன பெண் சற்று பின்நோக்கி செல்வது பதிவாகி உள்ளது.

மேலும் அந்த பதிவில் அந்த பெண், ‛‛இன்று பிளிங்கிட்டிடம் இருந்து ஆர்டர் பெறும்போது எனக்கு நேர்ந்த சம்பவம் இதுதான். டெலிவரி செய்ய வந்த நபர் எனது முகவரி கேட்டார். மேலும் தொடக்கூடாத இடத்தில் தொட்டார். இதனை ஏற்கவே முடியாது. பிளிங்கிட் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பு இந்தியாவில் கேலிக்கூத்தாக உள்ளதா? '' என பிளிங்கிட் நிறுவனத்தை ‛டேக்' செய்து கேள்வி கேட்டு இருந்தார்.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா இருந்தது. அந்த கேமராவில் பதிவான வீடியோவை அந்த பெண் வெளியிட்டுள்ளார். இந்த பதிவை தொடர்ந்து பிளிங்கிட் சார்பில் சரியான பதிலளிக்கவில்லை. அதன்பிறகு அந்த நிறுவனம் பெண்ணை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி அந்த நபரை பணியில் இருந்து நீக்கியது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பிளிங்கிட் என்னை தொடர்பு கொண்டனர். அவர்களிடம் நான் ஆதாரங்களை காட்டினேன். அவர்கள் அந்த நபரின் ஒப்பந்தத்தை நீக்கம் செய்து பிளாக் செய்துவிட்டனர்'' என கூறியுள்ளார்.

அதேவேளையில், ‛‛பிளிங்கிட் முதலில் எனது வார்த்தைகளை நம்பவில்லை. ஆதாரங்களை காட்டிய பிறகு தான் நம்பினர். மேலும் பெண்களிடம் பார்சல் டெலிவரி செய்யும்போது தூரமாக நிற்க வேண்டும் என்பதை பயிற்சி கொடுப்பதாக மட்டுமே கூறினார். நான் ஆதாரங்களை அனுப்பிய பிறகே நடவடிக்கை எடுத்தனர். என்னிடம் ஆதாரங்கள் இல்லாமல் இருந்தால் அவர்கள் அவர்கள் நடவடிக்கை எடுத்து இருக்க மாட்டார்கள் அல்லவா?'' என்று தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+