ஆபத்தில் 96 இந்திய விமானங்கள்.. தரையிறங்கும் போது பிரச்சனை இருக்கு! ஷாக் தகவல் அம்பலம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக விமானங்களில் குறிப்பிட்ட சில சாப்ட்வேர் கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட ஒரு தரையிறங்கும் சூழ்நிலையில் விமானத்தின் ஆடோபைலட் வழிகாட்டுதல் அமைப்பு செயலிழக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாசா ஏர் நிறுவனங்களிடம் மொத்தம் சுமார் 96 போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் உள்ள நிலையில், இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த சில காலமாகவே இந்திய விமான துறை தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. விமான பாதுகாப்பு என்ன தான் பாதுகாப்பானது என்றாலும் அது தொடர்ச்சியாக இதுபோல சர்ச்சைகளிலேயே சிக்கி வருகிறது. மீண்டும் இப்போது மற்றொரு சர்ச்சை வெடித்துள்ளது.

Boeing 737 MAX Software Issue Boeing 737 flight India

போயிங் 737 மேக்ஸ்

போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் காக்பிட் சாப்ட்வேர் அப்டேட் தொடர்பான பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்க முயலும்போது 'மிஸ்டு அப்பிரோச்' ஏற்பட்டால்.. விமானிகள் திட்டமிட்டிருந்த பாதையில் மாற்றம் செய்யும் சூழ்நிலையில் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால்.. விமானம் தரையிறங்குவதற்கான முதல் முயற்சி வெற்றியடையாமல், மீண்டும் வேறு பாதையில் தரையிறங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால், முதலில் திட்டமிடப்பட்ட பாதையிலிருந்து புதிய பாதைக்கு மாறும்போது விமானத்தின் ஆடோபைலட் வழிகாட்டுதல் அமைப்பு செயலிழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

என்ன சிக்கல்

அதேநேரம் முதல் முயற்சி தோல்வி அடையும்போது விமானத்தின் சிஸ்டம் மொத்தமாக செயலிழந்து விபத்தை ஏற்படுத்தும் என அர்த்தமில்லை. ஆடோபைலட் மட்டுமே செயலிழந்து போகும். விமானிகளை தொடர்ந்து கையால் விமானத்தை இயக்க முடியும். மேலும், இந்த சூழ்நிலையை பாதுகாப்பாக கையாளும் நடைமுறைகள் ஏற்கனவே உள்ளதாக போயிங் தெரிவித்துள்ளது.

96 விமானங்கள்

இந்தியாவில் இந்த குறிப்பிட்ட ரக போயிங் 737 MAX விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாசா ஏர் பயன்படுத்துகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சுமார் 53 போயிங் 737 MAX விமானங்களும், ஆகாசா ஏரிடம் 43 விமானங்களும் உள்ளன. அதாவது மொத்தம் இந்தியாவில் இரு நிறுவனங்களிடமும் சேர்த்து சுமார் 96 விமானங்கள் உள்ளன.

குறிப்பிட்ட ரக விமானதத்தை வைத்திருக்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த மாதமே சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக போயிங் கூறியுள்ளது. நிரந்தர தீர்வாக புதிய சாப்ட்வேர் அப்டேட்டை உருவாக்கி வருவதாகவும் போயிங் தெரிவித்துள்ளது. மிஸ்டு அப்பிரோச் ஏற்பட்ட பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தானியங்கி அமைப்பை மீண்டும் 'ரீசெட்' செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு போயிங் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளக்கம்

இது தொடர்பாக ஆகாசா ஏர் நிறுவனமும் விளக்கம் கொடுத்துள்ளது. போயிங் நிறுவனத்துடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் அதேநேரம் இந்த சாப்ட்வேர் பிரச்சினையால் தங்களது 737 மேக்ஸ் விமானங்களின் பாதுகாப்பில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஆகாசா ஏர் விமான நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், தங்களது 737 மேக்ஸ் விமானங்களில் எத்தனை விமானங்கள் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நிறுவனம் குறிப்பிடவில்லை.

பேயிங்கும் சர்ச்சைகளும்!

பேயிங் நிறுவனம் கடந்த சில காலமாகவே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. கடந்த 2025 ஜூன் மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானதில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு பிப்ரவரியிலும் லண்டன்- பெங்களூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 விமானத்தில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சின் லாக்கிங் மெக்கானிசம் தொடர்பாக விமானி சந்தேகம் தெரிவித்ததால் விமானம் தரையிறக்கப்பட்டது. இது இப்போது சர்ச்சையில் சிக்கிய மாடல் இல்லை என்றாலும் அந்த 737 மேக்ஸ் மாடல்களுக்கும் சர்ச்சை புதிதில்லை.

இந்த மேக்ஸ் விமானங்கள் ஏற்கனவே உலகளவில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. 2018ல் இந்தோனேசியாவில் லயன் ஏர் 737 மேக்ஸ் 8 விமானம் விபத்துக்குள்ளாகி 189 பேர் உயிரிழந்தனர். 2019ல் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் 737 மேக்ஸ் 8 விபத்தில் 157 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 737 மேக்ஸ் விமானங்கள் உலகம் முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கடுமையான சோதனைக்கு பிறகே அவை மீண்டும் சேவையில் நுழைய அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+