என்னை “ஜேக்கி”ன்னும் கூப்டுவாங்க.. ‘பாரத்’ என மாறினாலும் ‘இந்தியன்’ - ஜெயிலர் நடிகர் ஜாக்கி ஷராப்
டெல்லி: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது தொடர்பாக இந்தி நடிகர் அமிதாப் பச்சனை தொடர்ந்து ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராப் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டிற்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய அழைப்பிதழில் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என குறிப்பிடப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இம்மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பாரத் என பெயர் மாற்றும் தீர்மானத்தை மத்திய அரசு கொண்டு வரும் என கூறப்படுகிறது.

இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவாகவும், பலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஜெயிலர் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராப் இந்த பெயர் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். ஜாக்கி ஷராப் மற்றும் தியா மிர்சா ஆகியோர் இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 'பிளானட் இந்தியா' பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "முன்னதாக, நமது நாடு பாரத் என்று அழைக்கப்பட்டது தானே? என் பெயர் ஜாக்கி. ஆனால் சிலர் என்னை ஜேக்கி, சிலர் என்னை ஜோக்கி என்று அழைக்கிறார்கள். அவர்கள் என் பெயரை மாற்றுகிறார்கள், அதனால் நான் மாற மாட்டேன். பெயர் மட்டும் மாறும், நாங்கள் மாற மாட்டோம்.
நீங்கள் நாட்டின் பெயரை மாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஒரு இந்தியர் என்பதை மறந்துவிடாதீர்கள்." என்று தெரிவித்தார். இதற்கு முன்பாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் வெளியிட்டு உள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்தியா, பாரத் பெயர் பிரச்சனையால் நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்து கொண்டு இருக்க அமிதாப் பச்சன் திடீரென, "பாரத் மாதா கி ஜெய்" என்று எழுதினார். அமிதாப் பச்சனின் ட்வீட்டைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் மோடி இந்தியா என்ற பெயரை மாற்ற பயப்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.
சவுத்ரி கூறுகையில், "இந்தியா என்ற பெயர் வெளிநாடுகளால் வழங்கப்பட்டது. எனவே, பிரதமர் இந்தியா என்ற பெயரைக் கேட்பதையே வெறுக்கிறார். INDIA என்ற எதிர்க்கட்சி கூட்டணி உருவான நாள் முதல் பிரதமருக்கு இந்தியா என்ற பெயர் மீதான வெறுப்பு அதிகரித்து உள்ளது" என்றார். இந்திய அரசியலமைப்பின் 1வது பிரிவு, "இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியம்" என்று கூறுகிறது." என்றார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications