அதிகாலையில் வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ந்து போன பள்ளி நிர்வாகம்! டெல்லியில் ஷாக்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
பிரசாத் நகர், துவாரகா செக்டார் 5 உட்பட ஐந்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கின்றன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர்.

மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று டெல்லி முழுவதும் பல்வேறு பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications