விர்ச்சுவல் மீட்டிங்கிற்கு நேரில் வரணுமா? - பாஸின் மிரட்டலுக்கு தகுந்த பதிலடி கொடுத்த Gen Z ஊழியர்!
சென்னை: காலம் வேகமாக மாறிக்கொண்டே வருகிறது. குறிப்பாக Gen Z தலைமுறையினர் அனைத்து துறைகளிலும் பழமையான மரபுகளை அடித்து துவைத்து வருகின்றனர். இப்படி இருக்கையில், விர்ச்சுவல் மீட்டிங்கிற்கு நேரில் வர வேண்டும் என்று சொன்ன பாஸுக்கு, Gen Z ஊழியர்கள் ஒருவர் நச் பதிலடி கொடுத்திருப்பது பேசு பொருளாகி உள்ளது.
இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன. அதில், Gen Z ஊழியர் சொன்ன பதிலை போல, தாங்களும் சொல்ல நினைப்பதாக பலரும் கமென்ட் தெரிவித்து வருகின்றனர்.

என்ன நடந்தது?
நிறுவனத்தின் பாஸ், தனது ஊழியருக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில், காலை 7 மணிக்கு ஆன்லைன் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்காக அலுவலகத்திற்கு காலை 6.30 மணிக்கே வந்துவிட வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவேளை வரவில்லை எனில், அது கீழ்படியாமை என்று பொருள் கொள்ளப்படும். இதற்காக நீங்கள் சஸ்பெண்ட் கூட செய்யப்படலாம் என்று எச்சரிக்கபடப்டிருந்தது.
Gen Z
இந்த மெசேஜை படிக்கும்போது, ஆன்லைன் மீட்டிங் என சொல்லிவிட்டு எதுக்குடா நேர்ல வர சொல்றீங்க என நமக்கே கேட்க தோன்றுகிறது. 90's கிட்ஸ் நமக்கே இப்படியெனில், Gen Z ஊழியருக்கு எப்படி இருக்கும்?
நச் ரிப்ளை
எனவே அந்த ஊழியர், இதற்காக நறுக்கென கேட்டுவிட்டார். "தகவல் சொன்னதற்கு நன்றி, ஆன்லைன் மீட்டிங்கிற்கு நான் நேரில் வரப்போவதில்லை. மீட்டிங்கின் பெயரே 'விர்ச்சுவல்' என்பதால், நான் ஆன்லைன் மூலமாகவே கலந்துகொள்வேன். வருகையை விட, இருக்கும் இடத்தைக் காட்டி வேலை நீக்கம் செய்வேன் என மிரட்டுவது, கம்பெனி பாலிசி போலத் தெரியவில்லை, இது 'PowerPoint Abuse' (அதிகார துஷ்பிரயோகம்) போலத் தெரிகிறது. நான் ஆன்லைனில் வந்துவிட்டேன்" என்று கூறியிருக்கிறார்.
இந்த ரிப்ளை தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. இப்படிதான் நச் பதில் கொடுக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
பணி சூழல்
பணி சூழல் என்பது இந்தியாவில் மிக மோசமானதாக மாறியிருக்கிறது. அதிகாரிகளுக்கு கீழ்படிபவர்களே உண்மையான பணியாளர்கள் என்று கருதும் நிலை உருவாகியிருக்கிறது. இதை உடைக்க நீண்ட போராட்டம் தேவைப்படுகிறது. இப்படி இருக்கையில் Gen Z தலைமுறையினர் இதனை அசால்ட்டாக உடைத்து வருகின்றனர்.
-
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!












Click it and Unblock the Notifications