US tariff: டிரம்புக்கு எதிராக வியூகம்.. பிரதமர் மோடியிடம் பேசிய பிரேசில் அதிபர் லுலா.. இந்தியாவுக்கு ‛ஜாக்பாட்'
டெல்லி: இந்தியாவை போல் பிரேசிலுக்கும் 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார். பிரேசில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உறுப்பு நாடு, அமெரிக்காவை கடுமையாக எதிர்த்து வருவதால் இந்த வரி விதிப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரேசில் அதிபர் லூலா திடீரென்று நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுமார் ஒரு மணிநேரம் வரை பேசிய நிலையில் அதன் பின்னணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டின் மீது அபராதம் + வரி என்று கூறி 50 சதவீதம் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தான் இதற்கு முக்கிய காரணம்.

டிரம்பின் இந்த வரி விதிப்பால் நம் நாட்டுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு வரி அதிகமாக உள்ளது.
பிரேசில் - இந்தியாவுக்கு 50% வரி
மேலும் தற்போதைய சூழலில் இந்த 50 சதவீத வரி அமலாகும் பட்சத்தில் டிரம்பால் உலகிலேயே அதிக வரி விதிக்கப்படும் நாட்டின் பட்டியலில் இந்தியா தான் டாப்பில் இருக்கும். அமெரிக்காவின் பரம எதிரியான சீனாவுக்கே 30 சதவீத வரி தான் இருக்கும் நிலையில் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி உள்ளது. அதேபோல் தான் பிரேசில் நாட்டுக்கும் 50 சதவீத வரி அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று அமலுக்கு வந்தது. நம் நாட்டை போல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில் அங்கம் வகிக்கிறது.
மேலும் அமெரிக்க டாலருக்கு எதிராக பிரிக்ஸ் கரண்சியை கொண்டு வர வேண்டும் என்பதில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உறுதியாக உள்ளார். அதேபோல் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று பிரேசிலும் ஒன்று. இதனால் தான் பிரேசில் நாட்டுக்கும் டிரம்ப் 50 சதவீத வரியை போட்டுள்ளார்.
மோடியிடம் பேசிய பிரேசில் அதிபர்
இந்த நிலையில், நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரேசில் நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பேசினார். அப்போது ட்ரம்ப் விதித்துள்ள வரி தாக்கங்கள், வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. வரும் 2030ம் ஆண்டுக்குள் இருநாடுகளின் இடையேயான வர்த்தகத்தை 20 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.
இதற்காக, மெர்கோசூர் மற்றும் இந்தியா இடையேயான ஒப்பந்தத்தை விரிவுபடுத்தவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம். PIX மற்றும் இந்தியாவின் UPI ஆகிய இரு நாடுகளின் மெய்நிகர் கட்டண தளங்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டோம். அமெரிக்காவுக்கு பதில் இருநாடுகளும் தங்களின் பொருட்களை மாற்றி மாற்றி விற்பனை செய்யும் வகையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மோடி சொன்னது என்ன?
இதுகுறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "அதிபர் லுலா உடன் நல்ல உரையாடல் நடந்தது. என்னுடைய பிரேசில் பயணத்தை நினைவுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றியதற்கு அவருக்கு நன்றி கூறினேன். நாம் பிரேசில் உடன் வணிகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதிகாப்பு, சுகாதாரம் மற்றும் இன்னும் நிறைய விஷயங்களில் கூட்டாண்மையை வலுப்படுத்த உள்ளோம்.
உலக தெற்கு நாடுகளின் இடையே உள்ள இந்த வலுவான மற்றும் மக்கள் மைய கூட்டாண்மை அனைவருக்கு நன்மை பயக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
லுலா சொன்னது என்ன?
பிரேசில் அதிபர் லுலா, "நான் இந்திய பிரதமர் மோடிக்கு போன் செய்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்த அந்தப் போன் காலில், ஜூலை 8ம் தேதி பிரதமர் மோடி பிரேசிலுக்கு வந்தப்போது ஏற்பட்ட முக்கிய முடிவுகள் பற்றி பேசினோம். நாங்கள் சர்வதேச பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் ஒருதலைப்படுத்தப்பட்ட வரி விதிப்புகள் குறித்தும் விவாதித்தோம். இதுவரை, பிரேசில் மற்றும் இந்தியா தான், அதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்.
பலமுனை முறையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை, தற்போதைய சூழ்நிலையின் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தைக் குறித்து மீண்டும் பேசினோம்., இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு சாத்தியக்கூறுகளை ஆராய விவாதித்தோம்'' என்றார்.
இந்தியா வரும் லுலா
அதன்படி அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் லுலா இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்பக வரும் அக்டோபர் மாதத்தில், துணை அதிபர் ஜெரால்டோ ஆல்க்மின் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார்.
அப்போது அங்கே நடக்கும் வர்த்தக கண்காணிப்பு கூட்டத்தில் கலந்துகொள்வார். அவருடன் வரும் குழுவில் பிரேசில் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களும் இடம்பெற்றிருப்பார்கள். அவர்கள் இரு நாட்டிற்கும் இடையே வணிகம், பாதுகாப்பு, ஆற்றல், அரிய கனிமங்கள், சுகாதாரம், டிஜிட்டல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பார்கள்.
வலுவாகும் பிரிக்ஸ்
டொனால்ட் டிரம்பின் இந்த வரி விதிப்பின் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. டிரம்ப் நம் நாட்டை சீண்டிய நிலையில் இம்மாத இறுதியில் சீனா செல்கிறார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார். அதன்பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார். இப்போது பிரேசில் அதிபர் லுலாவும் இந்தியா வருகிறார்.
இதில் இந்தியா மட்டுமே அமெரிக்காவுடன் நட்பில் இருந்தது. ரஷ்யா, சீனா, பிரேசில் உள்ளிட்டவை அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நாடுகள். அதோடு அமெரிக்க டாலருக்கு மாற்று கரன்சியை பிரிக்ஸ் மூலமாக கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் நாடுகள். தற்போது டிரம்பின் வரி விதிப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு தலைவர்கள் இடையேயான பந்தத்தை அதிகரிக்கும் வகையில் உள்ளது.
-
ஈரானின் எரிபொருள் இதயத்திலேயே கை வைத்த டிரம்ப்.. கார்க் தீவிலேய களம் இறங்கிய அமெரிக்கா -
Kharg Island: ஈரானின் ”மணிமகுடம்” அடிமடியிலேயே கைவைத்த அமெரிக்கா.. கார்க் தீவில் அப்படி என்னதான் இருக்கிறது? -
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்.. சீனாவுக்கு சிக்னல் கொடுத்த டிரம்ப்.. பதற்றத்தில் ஈரான் -
ரயில் டிக்கெட் புக்கிங்.. வருகிறது மிக பெரிய கேம் சேஞ்சர் மாற்றம்! இனி ஒரே நொடியில் எல்லாமே முடியும் -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
“இந்தியா எங்கள் நண்பன்”.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிக்கும் ஈரான்! ஸ்பெஷல் பவர்! -
அடங்காத கிம் ஜாங் உன்.. 10 ஏவுகணைகளை ஏவி அமெரிக்காவை வம்பிழுக்கும் வடகொரியா! பெரும் பதற்றம் -
வளைகுடா இந்தியர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு -
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர் -
துபாய்க்கு போகும் விமானங்கள் ரத்து.. இண்டிகோ நிறுவனம் கொடுத்த முக்கிய மெசேஜ்! -
சிலிண்டர் தர மாட்டோம்! புதிய கனெக்ஷன் தர மாட்டோம்.. மத்திய அரசு முக்கிய உத்தரவு! யாருக்கு பொருந்தும் -
குழாய் வழி எரிவாயு இணைப்பு வைத்திருப்போருக்கு கட்டுப்பாடு! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications