சிக்கிய வாட்ஸ் ஆப் ஆதாரம்.. சிபிஐ சிறப்பு இயக்குனருக்கு எதிராகவே லஞ்ச வழக்கு பதிவு.. சிபிஐ அதிரடி!
Recommended Video

டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அமைப்பே அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்திய வரலாற்றில் முதல் முறை இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது. கடந்த சில மாதங்களாக சிபிஐக்குள் சில அதிகாரிகளுக்கு இடையே அதிகார மோதல் உள்ளது.
இந்த நிலையில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையும் பதிந்து இருக்கிறது. அவருக்கு எதிராக நிறைய ஆதாரங்களை திரட்டி வருகிறது.

என்ன வழக்கு
இறைச்சி ஏற்றுமதி வியாபாரம் செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் அலுவலகம் மற்றும் வீட்டில் கடந்த 2014ல் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் குரேஷி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்தது அம்பலம் ஆனது. இதற்கு பின் சில சிபிஐ அதிகாரிகள், சில மத்திய அரசு அதிகாரிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து இதை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.

லஞ்சம் வாங்கினார்
தற்போதைய சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையில் இந்த விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சதீஷ் சனா உள்ளிட்ட பல தொழிலதிபர்களிடம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கி அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் சதீஷ் தற்போது அப்ரூவர் ஆகியுள்ளார். இவரிடம் ராகேஷ் அஸ்தானா 3 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது.

எதிராக செயல்பட்டார்
அதேபோல், ராகேஷ் அஸ்தானா, தனது சிபிஐ அமைப்பில் உள்ள இயக்குனருக்கு எதிராகவே செயல்பட்டு இருக்கிறார்கள். தற்போதைய சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவிற்கு எதிராக ராகேஷ் அஸ்தானா சதித்திட்டம் தீட்டியதும் அம்பலம் ஆகியுள்ளது. அலோக் வெர்மாவிற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து அவரை பணியில் இருந்து நீக்க வைக்க வேண்டும் என்றும் ராகேஷ் அஸ்தானா திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆதாரம் சிக்கி உள்ளது
இது தொடர்பாக ராகேஷ் அஸ்தானா இடைத்தரகர்களிடம் பேசியது அம்பலம் ஆகியுள்ளது. இவர் பேசிய 9 போன் கால்களின் விவரம் வெளியாகி இருக்கிறது. அதேபோல் 100க்கும் அதிகமான வாட்ஸ் ஆப் சாட் ஆதாரங்கள் சிக்கி உள்ளது. இந்த போன் கால் ஆதாரமும், வாட்ஸ் ஆப் ஆதாரமும் இதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications
