Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேலும் விவரங்களுக்கு www.****.com.. திருமண பத்திரிகையில் பார்ன் சைட்டின் முகவரி..மணப்பெண் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மணப்பெண் ஒருவர் தனது பத்திரிகையில் தவறுதலாக ஆபாச இணையதளத்தின் லிங்க் அச்சடிக்கப்பட்டதாகவும் இதற்காக பெற்றோர், உறவினர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ப்ளூ ப்லிம் பார்க்க தோன்றுகிறதா? | மனைவி-மாமியார் சண்டையா?

    திருமணம் என்றால் பல கலாட்டாக்கள் இருக்கும். கிண்டல், கேலிகள், புரளி, அத்தை, மாமன் மகள், மகன்களின் அமர்களங்கள் என களைகட்டும். இதில் சிறு சிறு பிரச்சினைகளுக்காக முகத்தை திருப்பிக் கொள்ளும் சம்பவங்களும் இருக்கும்.

    அது போல் திருமணம், காதுக்குத்து, உள்ளிட்ட சடங்குகளில் பத்திரிகை அடிப்பது, பட்டு உடை வாங்குவதில் இருந்தே சண்டைகள் ஆரம்பிக்கும். திருமண அழைப்பிதழ் என வரும் போது அவசரத்தில் முக்கியமானவர்களின் பெயர்கள் விடுபட்டிருக்கும்.

     திருமணம்

    திருமணம்

    இதனால் "நான் இல்லாமல் திருமணம் நடைபெற்றுவிடுமா , ஆச்சா போச்சா" என கத்தி கலாட்டா செய்வர். ஆனால் மணமகன், மணமகள் இருந்தால் போதும் திருமணம் நடக்கும் என்ற காலம் இது. இப்படிப்பட்ட நிலையில் திருமண அழைப்பிதழில் அனைவருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் நெளியும் சூழலையும் ஒரு மணப்பெண் தவறுதலாக செய்துவிட்டார்.

     திருமண பத்திரிகை

    திருமண பத்திரிகை

    திருமண பத்திரிகையில் மணமகன், மணமகள் பெயர்கள், திருமணம் நடைபெறும் இடம், நேரம், நாள் குறித்தெல்லாம் இடம்பெறும். அது போல் ரிசப்ஷன் வைத்தால் அது குறித்த தேதியும் இருக்கும். எனது திருமணங்கள் தொடர்பான விவரங்களை அறிய இந்த இணையதள முகவரியை பாருங்கள் என குறிப்பிட்ட இணையதள முகவரியை மணப்பெண் கொடுத்துள்ளார்.

     அச்சகத்தில் அச்சடிப்பு

    அச்சகத்தில் அச்சடிப்பு

    ஆனால் அச்சகத்தில் அச்சடித்த நபர் அவ்வப்போது ஆபாச இணையதளங்களை பார்ப்பார் போல! யாருக்கும் தெரியும்! ஒரு பக்கம் ஆபாசம், மறுபக்கம் அந்த மணப்பெண் சொன்ன இணையதளத்தை வைத்திருந்திருப்பார். அவசரத்தில் மணப்பெண் கூறிய இணையதள முகவரியை காப்பி பேஸ்ட் செய்வதற்கு பதிலாக பார்ன் சைட்டின் முகவரியை காப்பி பேஸ்ட் செய்து அச்சும் அடித்துவிட்டார்.

     மணப்பெண்

    மணப்பெண்

    இதை அந்த மணப்பெண் ப்ரூஃப்பும் பார்க்கவில்லை. பத்திரிகை அடித்து முடித்து அதை கொண்டு வந்து மணப்பெண்ணிடம் அச்சக உரிமையாளர் நீட்டினார். அவருக்கு பத்திரிகைக்கான பணத்தை கொடுத்துவிட்டு பின்னர் ஆசை ஆசையாக பத்திரிகையை திறந்து பார்த்தார். அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதையடுத்து அந்த பத்திரிகையுடன் டிக்டாக்கில் வீடியோவில் தோன்றினார்.

     திருமண பத்திரிகையில் ஆபாச தள முகவரி

    திருமண பத்திரிகையில் ஆபாச தள முகவரி

    அப்போது திருமண பத்திரிகையின் போது இது போன்ற தவறுகள் எல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே எதுவாக இருந்தாலும் ஒரு முறை பிழைகளை சோதனை செய்யாமல் அச்சடிக்க இசைவு தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இது போன்ற தவறுக்கு தனது பெற்றோரிடமும் உறவினர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அந்த பெண் தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+