நெற்றியில் வியர்வை.. 2 பேஜ்தான் இருக்கு.. 2.42 மணி நேர பட்ஜெட்.. நிர்மலா சீதாராமன் புது ரெக்கார்ட்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Budget 2020: Nirmala Sitharaman talks for 2 hours 42 minutes,creates new record

    டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய வரலாற்றில் மிக நீண்ட நேரம் பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளார். தன்னுடைய ரெக்கார்டை தானே இவர் முறியடித்துள்ளார்.

    2020-2021 நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பட்ஜெட் தொடர்பான முக்கியமான திட்டங்களை, அறிவிப்புகளை தற்போது நிர்மலா சீதாராமன் வெளியிட்டார் .

    இந்த அறிவிப்பில் பொருளாதாரம், இணையம், விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கல்வித்துறை, முதலீடுகள், வேலைவாய்ப்பையே ஊக்குவிக்கும் வகையில் நிறைய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

    பட்ஜெட்

    பட்ஜெட்

    இந்த வருட பட்ஜெட்டை தாக்கல் செய்ய இவர் 2 மணி நேரம் 42 நிமிடம் எடுத்துக் கொண்டார். அதிலும் கூட கடைசி ஒரு பக்கத்தை இவர் படிக்கவில்லை. இவர் பட்ஜெட்டை படிக்கும் போது, சோர்ந்து போனார். அதேபோல் சில எம்பிக்களும் மதிய உணவு நேரம் என்பதால் சோர்ந்து போனார்கள். இதனால் நிர்மலா சீதாராமன் படித்துக் கொண்டு இருக்கும் போதே, பள்ளியில் டீச்சர் உணவு இடைவேளைக்கு முன் சொல்வது போல, இன்னும் இரண்டு பக்கம்தான் இருக்கிறது என்றார்.

    நீண்டது

    நீண்டது

    அந்த அளவிற்கு நிர்மலா சீதாராமன் நீண்ட உரையை இன்று செய்தார். அவருக்கு 2 மணி நேரத்திற்கு பின் முகம் முழுக்க வியர்வை வடிய தொடங்கியது. ஏசியிலும் கூட, நிர்மலா சீதாராமனுக்கு நெற்றியில் இருந்து வியர்வை வடிந்தது. இதற்கு முன் நிர்மலா சீதாராமன் 2019ம் ஆண்டியில் பட்ஜெட் தாக்கல் செய்த போது 2.15 மணி நேரம் எடுத்துக் கொண்டார். இதன் மூலம் தன்னுடைய ரெக்கார்ட்டை அவரே முறியடித்துள்ளார்.

    இதற்கு முன் யார்

    இதற்கு முன் யார்

    இதற்கு முன் 2003ல் நிதி அமைச்சர் ஜாஷ்வாந்த் சிங்க 2.13 மணி நேரம் பட்ஜெட் தாக்கல் செய்தார். 2014ல் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2 மணி நேரம் 10 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இவர் இரண்டு முறை இப்படி 2 மணி நேரத்தை தாண்டி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் 1.56 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அதேபோல் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் 1.50 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    எப்படி செய்தார்

    எப்படி செய்தார்

    இதற்கு முன் மத்திய நிதி அமைச்சராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருந்த 1992ல் இதேபோல் நீண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் 18,650 வார்த்தைகளை பயன்படுத்தினார். அதேபோல் தற்போதும் நிர்மலா சீதாராமன் 17,000+ வார்த்தைகளையே பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த பட்ஜெட் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த பட்ஜெட் காரணமாக மும்பை மார்க்கெட் சரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+