பயிர் கொள்முதல் திட்டம்.. 2.73 லட்சம் கோடி நிதி பெற்ற விவசாயிகள்.. நிர்மலா சீதாராமன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2021- 2022ஆம் ஆண்டில் பயிர் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடியாக 163 லட்சம் விவசாயிகள் ரூ 2.73 லட்சம் கோடி பெற்றனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2022-2023 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 4ஆவது முறையாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட், இரண்டாவது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அவர் கூறுகையில் கடந்த 2021- 2022 ஆம் ஆண்டு மத்திய அரசால் பயிர் கொள்முதல் மூலம் 163 லட்சம் விவசாயிகள் ரூ 2.73 லட்சம் கோடி தொகையை பெற்றனர்.

விவசாய நிலம்

விவசாய நிலம்

நெல் மற்றும் கோதுமை தானியங்கள் 1208 லட்சம் மில்லியன் டன்னிற்கு கொள்முதல் செய்யப்பட்டது. குறைந்தபட்ச ஆதார விலையான ரூ 2.73 லட்சம் கோடி தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரிடியாக செலுத்தப்பட்டது. கங்கை நதிக் கரையோரம் 5 கி.மீ. அகலமான காரிடாரில் விவசாய நிலத்தில் ரசாயனமற்ற இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்.

சிறுதானிய உற்பத்தி

சிறுதானிய உற்பத்தி

2023 ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டும். சிறுதானிய உற்பத்திக்கும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்துதலுக்கும் மத்திய அரசு உருதுணையாக இருக்கும். எண்ணெய் வித்துகளுக்கான விரிவான திட்டம் ஏற்படுத்தப்படும். நிலங்களை ஆய்வு செய்வதற்காக கிசான் டிரோன்கள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் விவசாய நிலங்களில் பூச்சி மருந்து தெளிக்கப்படும்.

வேளாண் பல்கலைக்கழகம்

வேளாண் பல்கலைக்கழகம்

இயற்கை விவசாயம், பூஜ்ய பட்ஜெட் விவசாயம், ஆர்கானிங் விவசாயம், நவீன விவசாயம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை வேளாண் பல்கலைக்கழக பாட புத்தகங்களில் மாநில அரசுகள் சேர்க்க வேண்டும். வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நபார்டு வங்கி உதவும். சிறு விவசாயிகள், சிறு குறு விவசாயிகளுக்கு ரயில்வே மூலம் புதிய தயாரிப்புகள் உருவாகும்.

மரக்கன்றுகள்

மரக்கன்றுகள்

விவசாயிகளுக்கு அனல் மின் நிலையங்கள் மேம்படுத்தப்படும். மரக்கன்றுகள் எரிப்பதை தடுக்க விவசாயத் துறைக்கு உயிரி எரிவாயு பயன்படுத்தப்படும். வேளாண் காடுகளை மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு கூடுதலாக உதவிகள் வழங்கப்படும் என்றார் நிர்மலா சீதாராமன்.

Recommended Video

    Union Budget 2022: வரி குறையும் பொருட்கள் என்ன? | Oneindia tamil
    விவசாயிகள் போராட்டம்

    விவசாயிகள் போராட்டம்

    3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஓராண்டுக்கு மேல் போராட்டம் நடத்திய நிலையில் அந்த சட்டங்கள் மத்திய அரசால் திரும்ப பெறப்பட்டன. எனினும் இந்த போராட்டத்தால் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாத சட்டம் இயற்றப்படவில்லை. விவசாயிகளுக்கு எதிரான வழக்குகள் திரும்ப பெறப்படவில்லை, லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் நிறைவு பெறாத விசாரணை என மத்திய அரசு வாக்குறுதி அளித்த எவையும் நிறைவேற்றப்படவில்லை என்பதால் நேற்றைய தினம் விவசாயிகள் துரோகிகள் தினமாக அனுசரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+