வருகிறது டிஜிட்டல் கரன்சி! பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் கீழ் செயல்படும் -நிர்மலா சீதாராமன் அதிரடி
டெல்லி: ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Recommended Video

இந்தியாவில் கிரிப்டோகரன்சி மீதான ஒழுங்குமுறை விதிகள் விரைவில் அமலுக்கு வரும், இதற்கான சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு அறிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் பட்ஜெட் 2022ல் டிஜிட்டல் கரன்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
சீனா, சவுதியில் கிரிப்டோ கரன்சி தடை உள்ளது. ஜப்பான், கனடா, ஸ்விஸ் போன்ற நாடுகளில் கிரிப்டோ கரன்சி தொடர்பான ஒழுங்கு முறை விதிகள் உள்ளது.

டிஜிட்டல் கரன்சி
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும். இந்திய பொருளாதாரத்தை டிஜிட்டல் கரன்சி புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் கரன்சி கொண்டு வரப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிளாக் செயின்
பிளாக் செயின் தொழில்நுட்பத்தில்தான் கிரிப்டோகரன்சி செயல்படுகிறது . உலகிலேயே மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பம் ஆகும் இது. இணையத்தில் க்ரிப்டோகரன்சிகளுக்காக இருக்கும் லெட்ஜர் என்று இதை கூறலாம். எந்த வங்கியின் கட்டுப்பாட்டிலும் இல்லாத தனி தனி கரன்சிகள் ஆகும் இது. உலகம் முழுக்க கிரிப்டோ கரன்சி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதை வைத்து சில மோசடிகள் நடந்து வருவதால் இப்போது டிஜிட்டல் கரன்சி கொண்டு வரப்பட்டுள்ளது.

சட்டம்
கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளை ஒழுங்கப்படுத்த மசோதா கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வந்தன. இந்தியாவில் தனியார் கிரிப்டோ கரன்ஸியை கட்டுப்படுத்தும் மசோதா, The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021, என்ற பெயரில் கொண்டு வரப்பட இருந்தது. ஆனால் அந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் டிஜிட்டல் கரன்சியை கொண்டு வர மத்திய அரசுக்கு ஆர்பிஐ பரிந்துரை செய்தது.

மசோதா இல்லை
அதாவது ரூபாய் போலவே டிஜிட்டல் கரன்சி ஒன்றை கொண்டு வர ஆலோசனை செய்யப்பட்டது. ஆர்பிஐ கொண்டு வர இருக்கும் டிஜிட்டல் கரன்சியை "வங்கி ரூபாய்" என்ற வரையறைக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் தெரிவித்தது. அதாவது இந்தியாவில் நாம் புழங்கும் ரூபாய் நோட்டுகளுக்கு இருக்கும் அதே ரிசர்வ் வங்கியின் அனுமதி, மதிப்பு அவர்கள் கொண்டு வரும் டிஜிட்டல் கரன்சிக்கும் இருக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications