Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் விரைவில் 5ஜி.. மொபைல் உற்பத்தியில் நாம்தான் டாப் -குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் உரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில் உரையாற்றி உள்ளார்.

2022ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. நாளை மத்திய பட்ஜெட் 2022ஐ மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டை முன்னிட்டு இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், அறிவிப்புகள், சாதனைகள் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

குடியரசுத் தலைவர் உரை

குடியரசுத் தலைவர் உரை

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் இன்று தனது உரையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் சுகாதாரத் திட்டங்களை பெறுவதற்கு பெரும் உதவியாக இருந்தது. கொரோனா பரவலை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டது. உலக நாடுகள் பலவற்றிற்கும் மருத்துவ உதவிகளையும் மருந்துகளையும் இந்தியா வழங்கியுள்ளது. உலக நாடுகளுக்கே இந்தியா பெரிய மருத்துவமனை போல செயல்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்க கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

ஸ்வநிதி யோஜனா திட்டம்

ஸ்வநிதி யோஜனா திட்டம்

சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக எனது அரசு பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதுவரை 28 லட்சம் சாலையோர வியாபாரிகள் 2900 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உதவியைப் பெற்றுள்ளனர். இந்த வியாபாரிகளின் விற்பனை பொருட்களை ஆன்லைன் நிறுவனங்களுடன் அரசு இப்போது இணைக்கிறது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி மூலம் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது

முதலீடு

முதலீடு

இந்த முதலீட்டின் மூலம் விவசாயத் துறையில் பெரிய மாற்றங்கள் தெரியும். இந்த திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது,. ஸ்டார்ட்-அப் திட்டங்கள் இந்தியாவில் முக்கிய பங்கு வகித்து வருகிறத. ஸ்டார்ட்-அப் திட்டங்கள் 6 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 5ஜி சேவை

5ஜி சேவை

தற்போது 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தொழில்நுட்ப பிரிவில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகுத்து வருகிறது. புதிய நவீன தொழில்நுட்பம் கொண்ட டிரோன்கள் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேக் இந்தியா திட்டம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. பல துறைகளில் மேக் இந்தியா திட்டம் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் புகுத்தப்பட்டு உள்ளன.

மொபைல் உற்பத்தி

மொபைல் உற்பத்தி

சர்வதேச அளவில் மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அந்த அளவிற்கு மேக் இன் இந்தியா திட்டம் வளர்ச்சி அடைந்து உள்ளது. பணமில்லா பரிவர்த்தனை டிஜிட்டல் பரிவர்த்தனை இந்திய வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் இன்டர்நெட், ஸ்மார்ட் போன்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.மின்னணு சாதனங்கள் மற்றும் ஹார்ட்வேர் பிரிவில் இந்தியா மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்தியா இந்த துறையில் முதலிடம் பிடிக்கும் சூழ்நிலைகள் நிலவி வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+