பட்ஜெட்டில் அதிரடி.. வரியில் மெகா மாற்றம்.. எதற்கெல்லாம் விலை கூடும்.. எதற்கெல்லாம் விலை குறையும்?
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் பல புதிய வரி விதிப்பு முறைகளை அறிமுகப்படுத்தியும், சில பொருட்களுக்கு வரிகளை குறைத்தும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல முக்கிய அறிவிப்புகளை இன்று அவர் பட்ஜெட்டில் வெளியிட்டார்.
விவசாயிகளுக்கான அறிவிப்புகள் தொடங்கி வட்டி இல்லா கடன் வரை பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். பல புதிய வரிகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதில் வெளியிட்டார்.

குறைப்பு
இந்த பட்ஜெட்டில் வரி குறைக்கப்பட்ட பொருட்கள். அதனால் விலை குறையும் பொருட்கள்.
செல்போன், டிவிக்கள் உற்பத்திக்கான உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைப்பு செய்யப்படுகிறது.
சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது,
லித்தியம் பேட்டரி இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.
டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5% குறைக்கப்படுகிறது.

அதிகரிப்பு
இந்த பட்ஜெட்டில் வரி உயர்த்தப்பட்ட பொருட்கள். அதனால் விலை உயரும் பொருட்கள்.
தங்கம், வைர நகைகள் மீதான சுங்க வரி அதிகரிப்பு செய்யப்படுகிறது.
வெள்ளி மீதான சுங்க வரி உயர்வு- வெள்ளி பொருட்கள் விலை உயருகிறது.
சிகரெட்டுகள் விலை உயரும்- சிகரெட்டுகள் மீது கூடுதல் வரி விதிப்பு செய்யப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட்டுகள் மீதான இறக்குமதி வரி 16% உயர்கிறது..
வருமான வரி படிவம் எளிமையாக்கப்படும்

முக்கிய அறிவிப்பு
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு - தேசிய தரவுகள் நிர்வாகக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் ; வாடிக்கையாளரை அடையாளம் காணும் நடைமுறை KYC எளிமைப்படுத்தப்படும். நகர்ப்புற வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்படும் ; வர்த்தகம் புரிதலை எளிமையாக்கும் வகையில் 39 ஆயிரத்திற்கும் அதிகமான நடைமுறைகள் நீக்கம். 42 புதிய சட்டங்கள் அறிமுகம் ; மூலதன முதலீடுகளுக்கான ரூ.10 லட்சம் கோடி வரை 33 சதவீதம் அதிகரிப்பு செய்யப்படும். 3 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ9,000 கோடி கடன் வழங்கப்படும்.

சுற்றுலா
50 சுற்றுலா இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்படும். மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கு ஆதரவு அளிக்கப்படும். 100 முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன ஆவணங்களைப் பாதுகாக்க டிஜிட்டல் இ லாக்கர்கள் வழங்கப்படும். பசு வளர்ப்பு திட்டத்துக்கு ரூ10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 5 ஜி செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள்; இ கோர்ட் திட்டத்துக்கு ரூ7,000 கோடி ஒதுக்கீடு. முதியோர் வைப்பு தொகை வரம்பு ரூ30 லட்சமாக உயர்வு செய்யப்படும்.

புதிய திட்டங்கள்
இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் புதிய கல்வி கொள்கையில் அம்ரித் பிதி திட்டம்; புதிய பழகுநர் திட்டத்தின்கீழ் 47 லட்சம் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி. பழைய வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை மாற்றுவதற்கு மாநிலங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும். கடலோரத்தில் உப்புத்தன்மை வாய்ந்த பகுதிகளில் அலையாத்தி காடுகளை மிஸ்டி என்ற பெயரில் வளர்க்க திட்டம். மின்சார பரிமாற்றத் துறைக்கு ரூ.35,000 கோடி நிதிஒதுக்கீடு. கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் 500 புதிய திட்டங்களுக்கு அனுமதி. 10,000 உயிரி உள்ளீடு மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications