"நிர்மலா சீதாராமன் புது சாதனை".. மொராஜி தேசாய், மன்மோகன் சிங், சிதம்பரத்தை முந்தி முதலிடம்! எப்படி
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ந்து தாக்கல் செய்யும் 7 வது பட்ஜெட்டாக அமைந்தது. இதன்மூலம் அவர் முன்னாள் பிரதமர்களான மொராஜி தேசாய், மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் ஆகியோரை முந்தி முதலிடம் பிடித்து அசத்தி உள்ளார்.
மத்தியில் கடந்த 2024, 2019 ஆகிய ஆண்டுகளில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சியை பிடித்தது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மத்திய அரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. மீண்டும் பிரதமராக மோடி தேர்வாகி உள்ளார்.

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மீண்டும் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராகி உள்ளார். பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரைவில் கடந்த 2014 காலக்கட்டத்தில் நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அருண் ஜெட்லி நிதி அமைச்சராக இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு முழுநேர நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் செயல்பட்டு வருகிறார்.
இதன்மூலம் இந்தியாவின் முழு நேர மத்திய பெண் நிதி அமைச்சர் என்ற பெயரை நிர்மலா சீதாராமன் பெற்றார். நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை கடந்த 2019ம் ஆண்டில் தாக்கல் செய்தார். இதையடுத்து 2020, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 6 பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.
இத்தகைய சூழலில் தான் இன்று மீண்டும் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 7 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் மத்திய அமைச்சர் என்ற பெருமையைையும், முதல் மத்திய பெண் நிதி அமைச்சர் என்ற புகழையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
அதாவது இந்தியாவில் இப்போது வரை நிதி அமைச்சராக ஒருவர் 6 பட்ஜெட்டை மட்டுமே தொடர்ந்து தாக்கல் செய்யதுள்ளார். அவர் யார் என்றால் முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய் தான். இவர் இவர் 1959ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரையிலான காலத்தில் 5 முழு பட்ஜெட், ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இவர் முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக செயல்பட்டு 6 பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதன்பிறகு இவர் 1977 ம் ஆண்டில் பிரதமராக பொறுப்பேற்றார்.
மொராஜி தேசாய் மட்டுமே தொடர்ந்து 6 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது சாதனையை கடந்த இடைக்கால பட்ஜெட் தாக்கலின்போது நிர்மலா சீதாராமன் சமன் செய்தார். இந்நிலையில் தான் தற்போது 7 வது பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து தொடர்ந்து 7 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமையை பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா, அருண் ஜெட்லி ஆகியோரின் சாதனைகளை முறியடித்திருந்தார். இவர்கள் அனைவரும் தொடர்ந்து 5 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.. தற்போது நிர்மலா சீதாராமன் 7வது பட்ஜெட்டை தொடர்ந்து தாக்கல் செய்து இவர்கள் மட்டுமின்றி முன்னாள் பிரதமர் மொராஜி தேசாயின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications