"தங்கம் விலை குறைகிறது.." பட்ஜெட் 2024: எந்த பொருட்கள் விலை உயர்கிறது.. எதன் விலை குறைகிறது?
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் ஏழாவது பட்ஜெட் இதுவாகும். இதில் பல்வேறு பொருட்களுக்கான வரியை நிர்மலா சீதாராமன் மாற்றி அமைத்தார். இதன் காரணமாக சில பொருட்களின் விலை குறையும் அதேநேரம் சில பொருட்களின் விலை அதிகரிக்கவும் செய்கிறது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
நமது நாட்டில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதைத் தொடர்ந்து மற்ற மாநில அரசுகளும் பட்ஜெட்களை தாக்கல் செய்யும்.

நிர்மலா சீதாராமன்: ஆனால், இந்தாண்டு மத்தியில் லோக்சபா தேர்தல் நடைபெற்றதால் நிர்மலா சீதாராமன் கடந்த பிப். மாதம் இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்தார். லோக்சபா தேர்தலில் வென்று என்டிஏ கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், இன்றைய தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதற்காக நேற்றைய தினம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஏழாவது பட்ஜெட் இதுவாகும்.. கிராமப்புறப் பொருளாதாரம், விவசாயம், சிறு குறு தொழிற்சாலைகள் உள்ளிட்ட விஷயங்களுக்கு இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பட்ஜெட்: மேலும், பொதுவாக பட்ஜெட் அறிவிப்பில் பல முக்கிய பாயிண்டுகள் இடம்பெற்று இருக்கும். இதனால் பல பொருட்கள் காஸ்ட்லியாகவும் பல பொருட்கள் மலிவானதாகவும் மாறும். அதன்படி கடந்த 2023-24 பட்ஜெட்டிற்கு பிறகு தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்போன்கள், இறால் தீவனம், ஆய்வக வைரங்கள் விலை கணிசமாகக் குறைந்தன. மறுபுறம் சிகரெட், சைக்கிள்கள், கவரிங் நகைகள், விமான டிக்கெட்கள், மின்சார புகைபோக்கி, ஜவுளி ஆகியவை காஸ்ட்லியாக மாறின.
விலை குறையும்: அதேபோல ஸ்மார்ட்போன்கள், 25 முக்கியமான கனிமங்கள், சோலர் மின்சார உபகரணங்கள், கடல் ஆய்வு பொருட்கள், தங்கம், வள்ளி உள்ளிட்ட பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளன. இதனால் இதன் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.
இ-காமர்ஸ் மீதான டிடிஎஸ் விகிதம் 1 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர 25 முக்கியமான கனிமங்கள், தங்கம், வள்ளி உள்ளிட்ட பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளன. இதனால் இதன் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.
விலை அதிகரிக்கும்: அதேபோல அமோனியம் நைட்ரேட், பிலாஸ்டிக், தொலைத்தொடர்பு உபகரணங்களின் வரி அதிகரித்துள்ளதால் இது சார்ந்த பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
தங்கம் விலை: கடந்த சில மாதங்களாகவே தங்கம் விற்பனை குறைந்துள்ளதாகவும் இதனால் தங்கம் மீதான டியூட்டியை குறைக்க வேண்டும் என்றும் நகைக்கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்றுத் தங்கத்திற்கான வரியைக் குறைத்துள்ளனர். தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரி 15%இல் இருந்து 6%ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிளாடினத்திற்கான வரியும் 6.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தங்கம் விலை கணிசமாகக் குறைகிறது. சென்னையில் பட்ஜெட்டிற்கு பிறகு ஒரு சவரன் தங்கம் ரூ.2080 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications