Budget 2025: ஒரு ரூபாய்.. மத்திய அரசுக்கு வரும் வருவாய் எவ்வளவு? செலவு எவ்வளவு?
டெல்லி: 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசுக்கு கிடைக்கும் ஒரு ரூபாய், எப்படி செலவு செய்யப்படுகிறது என்ற விவரங்கள் தெரிய வந்துள்ளது. அதில் ஒரு ரூபாயில் ரூ.0.24 பைசா கடன் வாங்கும் மத்திய அரசு, ரூ.0.20 பைசா வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும் பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன்படி போக்குவரத்து துறைக்கு ரூ.5.48 லட்சம் கோடியும், பாதுகாப்புத் துறைக்கு ரூ.4.91 லட்சம் கோடியும், வேளாண் துறைக்கு ரூ.1.71 லட்சம் கோடியும், கல்வித் துறைக்கு ரூ.1.28 லட்சம் கோடியும், சுகாதாரத் துறைக்கு ரூ.98,311 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உள்துறைக்கு ரூ.2.33 லட்சம் கோடியும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ. 2.66 லட்சம் கோடியும், நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ.69,777 கோடியும், சமூக நலன் துறைக்கு ரூ.60,052 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நிதியாண்டில் மத்திய அரசு தரப்பில் ரூ.14.82 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மத்திய அரசுக்கு கிடைக்கும் ஒரு ரூபாய் எப்படி வரவாக வருகிறது, அது எப்படி செலவு செய்யப்படுகிறது என்ற விவரங்களும் வெளி வந்துள்ளது. அதன்படி மத்திய அரசுக்கு கிடைக்கும் ஒரு ரூபாயில் ரூ.0.24 பைசா கடன் வாங்குவதன் மூலமாகவும், ரூ.0.22 பைசா வருமான வரி மூலமாகவும், ரூ.0.18 பைசா ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள் மூலமாகவும், ரூ.0.17 பைசா கார்ப்பரேட் வரி மூலமாகவும், ரூ.0.09 பைசா வரியில்லா வருவாய் மூலமாகவும், ரூ.0.05 பைசா மத்திய கலால் வரி வாயிலாகவும், ரூ.0.04 பைசா சுங்க வரி மூலமாகவும், ரூ.0.01 பைசா கடனில்லா மூலதள வருவாய் மூலமாகவும் கிடைக்கிறது.
அதேபோல் மத்திய அரசுக்கு கிடைக்கும் ரூ.1 வருவாயில், ரூ.0.20 பைசா கடன் வட்டியாகவும், ரூ.0.22 பைசா மாநில வரிப்பகிர்வாகவும் அளிக்கப்படுகிறது. ரூ.0.16 பைசா மத்திய அரசின் திட்டங்களுக்கும், ரூ.0.08 பைசா மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களுக்கும், ரூ.0.08 பைசா நிதிக்குழு மற்றும் பிற மாற்றங்களுக்கும், ரூ.0.08 பைசா பாதுகாப்புக்காகவும், ரூ.0.06 பைசா மானியத்திற்கும், ரூ.0.04 பைசா பென்ஷனுக்கும், ரூ.0.08 பைசா பிற செலவினங்களுக்கும் செலவிடப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications