"வருமான வரி.." இனி குழப்பமே இல்லை.. ரொம்ப ஈஸியா எல்லாம் முடிஞ்சுடும்.. வருகிறது புதிய சட்டம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதற்கிடையே இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமான வரி தொடர்பான புதிய மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். தற்போதுள்ள சட்டத்தில் வரி செலுத்தும் முறை கடினமாக இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், அதை எளிமைப்படுத்தும் விதமாக இந்த புதிய சட்டம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

நாளை ஜனவரி 31ம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. நாளை பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும் சூழலில், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

budget 2025 union budget 2025 nirmala sitharaman 2025 2025

நேரடி வரி குறியீடு:

இதற்கிடையே நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமான வரி தொடர்பாக மத்திய அரசு புதிதாக நேரடி வரி குறியீடு அதாவது Direct Tax Code என்ற பெயரில் புதிய வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்தவுள்ளது. இது வருமான வரி செலுத்தும் முறையை எளிமையாக்க உதவும் எனச் சொல்லப்படுகிறது. அதேநேரம் இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட் உரையுடன் இருக்காது என்றும் தனியாகவே இந்த மசோதா கொண்டு வரப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது..

இந்த புதிய டிடிசி மசோதா குறித்துக் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபா தேர்தலுக்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அப்போதே இந்த டிடிசி குறித்துப் பேசியிருந்தார். தற்போதைய வருமான வரிச் சட்டங்களை விட புதிய சட்டம் படிக்கவும் புரிந்து கொள்ளவும் எளிமையாக இருக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், 1961ஆம் ஆண்டின் ஐ-டி சட்டத்தில் உள்ள பக்கங்களை 60% வரை குறைப்பதே இந்த புதிய சட்டத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்..

புதிய சட்டம்:

1961 ஐடி சட்டம் என்பது நேரடி வரிகள் தொடர்புடையதாகும். அதாவது தனிநபர் மற்றும் பெருநிறுவன வரி, அத்துடன் பத்திரப் பரிவர்த்தனைகள், பரிசுகள் மீது விதிக்கப்படும் வரி ஆகியவை குறித்து விளக்குவதாகும். இது மொத்தம் 23 அத்தியாயங்களையும் 298 பிரிவுகளையும் கொண்டுள்ளது.

ஆனால், இது மிகவும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் கடினமாகவும் இருப்பதாகப் பொதுமக்கள் கூறுவதால் அதை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. புதிய சட்டத்தில் வரித் தொகையைக் கணக்கிடுவது மற்றும் வருமானத்தைத் தாக்கல் செய்வது எளிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய வரி:

மேலும், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் எல்ஐசியில் முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஐந்து சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டிற்குமே தற்போது வரி விலக்கு அளிக்கப்படும் சூழலில், புதிய சட்டத்தில் 5% வரி இருக்கும் என்று அதேபோல ஈவுத்தொகை அதாவது Dividendsகளில் 15 சதவீத வரி விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய திருத்தப்பட்ட சட்டம் பட்ஜெட் உரை முடிந்த பிறகு நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்:

முன்னதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தை மாற்றி அமைக்க ஒரு குழுவை நிதியமைச்சர் அறிவித்து இருந்தார். இந்த குழு பழைய சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களை மதிப்பிட்டு ஆலோசனைகளை அளிக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம் இது குறித்து பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த சூழலில், சுமார் 7000க்கும் மேற்பட்ட கருத்துகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+