பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்கள் கவனிக்க வேண்டியவை என்ன? 14 முக்கியமான பாயிண்டுகள்
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பொதுவாக மத்திய பட்ஜெட்களில் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன இருக்கிறது என்ற அறிவிப்பே கவனம் பெறும். இந்தாண்டு அதுபோல பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் கூட குறிப்பிட்ட சில அறிவிப்புகள் கவனிக்க வைப்பவையாக மாறியுள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த மத்திய பட்ஜெட்டில் இந்தியாவின் மிடில் கிளாஸ் மக்களுக்கு நேரடியாக உற்சாகத்தைத் தரும் அறிவிப்பு எதுவும் இல்லை என்பதே உண்மை. வருமான வரி வரம்புகளில் எந்த மாற்றமும் இல்லை. standard deduction எனப்படும் நிலையான கழிவு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தொடர்பாகவும் எந்தவொரு அறிவிப்பும் இல்லை.

மிடில் கிளாஸ் மக்கள்
ஆனால், அதற்காக நடுத்தர மக்களுக்கும், சிறு முதலீட்டாளர்களுக்கும் இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. இதில் பல சலுகைகள் மறைந்துள்ளன. உங்க பர்சனல் ஃபைனான்ஸை பாதிக்கும் அந்த 14 முக்கியமான விஷயங்களை பார்க்கலாம்!
14 பாயிண்டுகள்
- வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ்களுக்கான TCS வரி 5% மற்றும் 20%-லிருந்து 2% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல வெளிநாட்டுக் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்கான வரியும் 2%-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இது மிடில் கிளாஸ் குடும்பங்களுக்குப் பெரிய சேமிப்பை தரும்.
- வெளிநாட்டிலிருந்து சொந்தப் பயன்பாட்டுக்காக நீங்க வாங்குகின்ற பொருட்களுக்கான இறக்குமதி வரி 20%-லிருந்து 10%-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஐபோன் முதல் வெளிநாட்டு எலக்ட்ரானிக்ஸ் வரை விலை குறையும்.
- வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ்களுக்கான TCS வரி 5% மற்றும் 20%-லிருந்து 2% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல வெளிநாட்டுக் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்கான வரியும் 2%-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இது மிடில் கிளாஸ் குடும்பங்களுக்குப் பெரிய சேமிப்பை தரும்.
- மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் (MACT) வழங்கும் வட்டித் தொகைக்கு இனி வருமான வரி கிடையாது. இது நடுத்தர மக்களுக்கு ஒரு பெரிய மனிதாபிமான அடிப்படையிலான சலுகையாக இருக்கும்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்
- வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துக்களை விற்றால், இனி TAN தேவையில்லை. வாங்குபவர் தனது PAN கார்டு மூலமே வரி பிடித்தம் செய்து கட்டலாம்.
- இதுவரை வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்துக்களைக் கணக்கு காட்டாதவர்கள், ஒரு கோடி முதல் 5 கோடி வரை வரம்புக்கு உட்பட்டு, உரிய வரி கட்டி அபராதத்திலிருந்து தப்பிக்கலாம்.
- வரி தொடர்பான சிறு தவறுகளுக்கு இனி சிறைத் தண்டனை கிடையாது, அபராதம் மட்டுமே! மேலும், வரி தொடர்பான மேல்முறையீட்டு காலத்தில் அபராதத் தொகைக்கு வட்டி விதிக்கப்படாது. இது நேர்மையான வரிதாரர்களுக்கு ஒரு பெரிய பாதுகாப்பைத் தரும்.
- பங்குகளை கம்பெனி திரும்ப வாங்கும்போது (Buyback) கிடைக்கும் லாபம், இனி மூலதன ஆதாயமா (Capital Gains) கருதப்படும். இது சிறு முதலீட்டாளர்களுக்குச் சாதகமான விஷயமாக இருக்கும்.
- உங்கள் IT ரிட்டர்ன்ஸை திருத்தி தாக்கல் செய்ய இனி டிசம்பர் 31 வரை காத்திருக்க வேண்டாம். மார்ச் 31 வரை உங்களுக்கு டைம் இருக்கு. ஆனால் அதற்குச் சிறிது கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
அலைய வேண்டாம்
- சிறு வரிதாரர்களுக்கு ஒரு குட் நியூஸ்! 'NIL deduction' அல்லது குறைந்த வரி பிடித்தம் செய்யும் சான்றிதழ் வேண்டுமானால், இனி நீங்க அதிகாரிகளிடம் அலைந்து அப்ளிகேஷன் போட வேண்டாம். ஒரு ஆட்டோமேட்டிக் சிஸ்டம் மூலமாக அதுவே உங்களுக்குக் கிடைத்துவிடும்.
- மேன்பவர் சர்வீஸ் வழங்குபவர்களுக்கு TDS இனி 1% அல்லது 2% மட்டுமே பிடிக்கப்படும். இதனால் வரிப் பிடித்தம் தொடர்பான குழப்பங்கள் இனி இருக்காது.
- வரும் ஏப்ரல் 1, 2026 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வருகிறது. இதனால் வரி விதிகள் மற்றும் படிவங்கள் (Forms) ரொம்பவே எளிமையாக்கப்படப் போகிறது. ஒரு சாதாரணக் குடிமகன் கூட யாரோடு உதவியும் இல்லாமல் சுலபமா வரி தாக்கல் செய்வது போல இது இருக்கும்
பங்குகள்
- நிறைய கம்பெனிகள்ல பங்குகள் வைச்சிருக்கீங்களா? இனி ஒவ்வொரு கம்பெனிக்கும் தனித்தனியா 15G / 15H கொடுக்க வேண்டாம். உங்களோடு 'டெபாசிட்டரி' (Depository) மூலமா ஒரே இடத்தில் கொடுத்தாலே போதும், அவர்கள் மத்த கம்பெனிகளுக்கு அனுப்பிவிடுவார்கள்!.
- தனிநபர்களுக்கு (ITR 1 & 2) வழக்கம் போல ஜூலை 31 தான் கடைசித் தேதி. ஆனால், ஆடிட்டிங் தேவைப்படாத பிசினஸ் மற்றும் டிரஸ்ட்டுகளுக்கு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications