பட்ஜெட் 2026.. ஜனவரியில் இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் வரலாற்றில் இல்லாத உயர்வு.. விவரம்
டெல்லி: உள்நாட்டுத் தேவை மற்றும் வலுவான இறக்குமதி நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் ஜனவரி மாதத்தில் ரூ. 1,93,384 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 6.2 சதவீதம் அதிகமாக இருக்கிறது. நடப்பு நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வரவுகள் 8.3 சதவீதம் அதிகரித்து ரூ. 18,43,423 கோடியைத் தொட்டிருக்கிறது. அதே நேரத்தில் ஜனவரி மாதத்திற்கான நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,70,719 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 2017-லிருந்து அதன் வசூல் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக கோவிட் காலத்திற்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் வரி ஏய்ப்புத் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக வசூல் அதிகரித்திருக்கிறது. பல வணிகர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை காரணமாக ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்துவிட்டனர். 2018 -19ம் ஆண்டில் ₹11,77,368 கோடி இருந்த ஜிஎஸ்டி வரி வசூல், 2024-25ல் ₹22,08,861 கோடியாக உயர்ந்து இருந்தது. 2025-26ல் ஏப்ரல் முதல் ஜனவரி வரை மட்டுமே ₹18,43,423 கோடியாக இருக்கிறது.

இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ. 1,93,384 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 6.2 சதவீதம் அதிகமாக இருக்கிறது. நடப்பு நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வரவுகள் 8.3 சதவீதம் அதிகரித்து ரூ. 18,43,423 கோடியைத் தொட்டிருக்கிறது. அதே நேரத்தில் ஜனவரி மாதத்திற்கான நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,70,719 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
ஜிஎஸ்டி வரி ரீபண்ட்டை பொறுத்தவரை.. திரும்பப் பெறும் தொகைகளில் சீரற்ற போக்குகள் காணப்பட்டது. உள்நாட்டுத் திரும்பப் பெறும் தொகைகள் குறைந்ததால், மொத்தத் திரும்பப் பெறும் தொகை 3.1 சதவீதம் சரிந்துள்ளது. அதே சமயம் ஏற்றுமதியை பொறுத்தவரை திரும்பப் பெறும் தொகைகள் சற்றே அதிகரித்துள்ளன.
உள்நாட்டு ஜிஎஸ்டி வசூல் 4.8 சதவீதம் அதிகரித்து ரூ. 1,41,132 கோடியாகவும், இறக்குமதி ஜிஎஸ்டி 10.1 சதவீதம் அதிகரித்து ரூ. 52,253 கோடியாகவும் இருந்தது. இழப்பீட்டு வரி ரூ. 5,768 கோடியாகக் கடுமையாகக் குறைந்தது. இது 55.6 சதவீத சரிவாகும். இது இடைக்கால வரியை படிப்படியாக நீக்கும் செயல்முறையை அடிக்கோடிட்டு காட்டிருக்கிறது.
மாநில வாரியான வரியை பொறுத்தவரை கலவையாகவே இருந்தது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தெலுங்கானா உள்பட நாட்டின் பெரிய தொழில் துறை மாநிலங்கள் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, அதே சமயம் சிறிய மாநிலங்களில் சரிவு காணப்பட்டது.












Click it and Unblock the Notifications