பெண்களை ஏலம் விட்ட புல்லி பாய் செயலி.. உருவாக்கிய 21 வயது இளைஞர் அசாமில் கைது.. டெல்லி போலீஸ் அதிரடி
டெல்லி: இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை புல்லி பாய் எனும் செயலியில் பதிவிட்டு விற்பனைக்கு என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் அந்த செயலியை உருவாக்கிய 21 வயது இளைஞர் நீரஜ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி புல்லி பாய் எனும் செயலியில் பெண் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், முஸ்லீம் பெண் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அவர்களை ஏலம் விடுவதாக அந்த செயலியில் அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் புல்லி பாய் செயலியின் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புல்லி பாய் செயலி
இந்த புல்லி பாய் செயலியின் பின்னணியில் பெங்களூருவை சேர்ந்த பொறியியல் மாணவர் விஷால் ஜா என்பவர் இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து பெங்களூர் விரைந்த மும்பை போலீஸார் விஷால் ஜாவை கைது செய்தனர். அவரிடம் 10 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினார்.

புல்லி பாய் மாஸ்டர் மைண்ட்
இதில் விஷால் ஜா இந்துத்துவா ஆதரவாளர் என தெரியவந்தது. தன்னுடன் அரசியல் ரீதியாக முரணுள்ள பெண்களை ஏலம் விடுவதாக அறிவித்ததை ஒப்புக் கொண்டார். இந்த செயலியை தொடங்குவதற்கு மாஸ்டர் மைண்டாக இருந்த மேலும் இருவரை மும்பை இணைய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

புல்லி பாய் விவகாரத்தில் பெண் கைது
அவர்களில் ஒருவர் 18 வயது இளம்பெண், இவர் உத்தரகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் மூன்றாவது நபராக உத்தரகண்டை சேர்ந்த 21 வயது மாணவர் மயங்க் ராவல் கைது செய்யப்பட்டார். இந்த 18 வயது பெண் தாய், தந்தையை இழந்தவராம். பள்ளி படிப்பை முடித்துவிட்டு பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுத தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறாராம்.

யார் அந்த நேபாள நண்பர்
நேபாளத்தை சேர்ந்த அவரின் நண்பர் ஒருவர் கொடுத்த அறிவுறுத்தலின் பெயரில் இதை செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்த நேபாள நண்பர் கியூ என அழைக்கப்படுகிறாராம். அவரை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை போலீஸ் எடுக்கத் தொடங்கியுள்ளது.
Recommended Video

புல்லி பாய் செயலியை உருவாக்கியவர் கைது
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த செயலியை உருவாக்கி 21 வயது நீரஜ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டுள்ளார். அஸ்ஸாமில் பதுங்கியிருந்த இவரை டெல்லி சிறப்பு படை போலீஸார் கைது செய்தனர். இவருடன் சேர்த்து இதுவரை இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications