Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்லாமிய பெண்களை ஏலம் விடும் "Bulli Bai" ஆப்.. அசாம் VIT மாணவரை தூக்கிய டெல்லி போலீஸ்.. திருப்பம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்லாமிய பெண்களை ஏலம் விடும் Bulli Bai என்ற செயலியை நடத்தி வந்த 21 வயதே ஆன பிடெக் மாணவர் டெல்லி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி ஏலம் விடும் Sulli Deals என்ற செயலி கடந்த சில மாதங்களுக்கு முன் முடக்கப்பட்டது. இது இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை ஏலம் விட்டு கமெண்ட் செய்யும் செயலி ஆகும். அவர்களை இழிவுபடுத்தும் வகையில் தனிப்பட்ட புகைப்படங்களை அப்லோட் செய்து அதை ஏலம் விட்டு விற்பனை செய்து உள்ளனர்.

இந்த செயலி முடக்கப்பட்ட நிலையில் அதை நடத்தி வந்த யாரும் அப்போது கைது செய்யப்படவில்லை. இதையடுத்து தற்போது இதேபோன்று இஸ்லாமிய பெண்களை ஏலம் விடும் Bulli Bai என்ற செயலி உருவாக்கப்பட்டு சர்ச்சையாகி உள்ளது.

Sulli Deals செயலி

Sulli Deals செயலி

இந்த புதிய Bulli Bai செயலியிலும் பல நூறு இஸ்லாமிய பெண்களின் புகைப்படத்தை பதிவேற்றி அதை ஏலம் விட்டுள்ளனர். இஸ்லாமிய பெண்களை அவமதிக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு செயலியை உருவாக்கி உள்ளனர். இந்த செயலிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் Bulli Boi செயலியில் இஸ்லாமிய பெண்களை ஏலம் விட்ட விஷால் ஜா என்ற 21 வயது இளைஞர் இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

 Bulli Bai செயலி

Bulli Bai செயலி

இவர் பெங்களூரில் கல்லூரி படித்து வரும் மாணவர். இவரை தொடர்ந்து இதே வழக்கில் மைனர் பெண் ஒருவர் நேற்று முதல் நாள் கைது செய்யப்பட்டார். அவர் உத்தரகாண்டை சேர்ந்தவர். 17 வயதாகும் இவர் இந்த செயலியை நடத்தி வந்தவர்களின் முக்கியமான ஒருவர். மும்பை அழைத்து செல்லப்பட்ட இவர் போலீஸ் கஸ்டடியில் விசாரணை செய்யப்பட்டு வருகிறார். பெண் ஒருவர் இந்த வழக்கில் கைதானது பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்த கைது

அடுத்த கைது

இந்த நிலையில் இந்த செயலிக்கு பின் மாஸ்டர் மைண்டாக இருந்த 21 வயது இளைஞர் டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு மூலம் அசாமில் கைது செய்யப்பட்டு உள்ளார். கைது செய்யப்பட்ட அந்த மாணவரின் பெயர் நீரஜ் பிஷ்னோய் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். அசாம் மாநிலத்தில் போபாலில் இருக்கும் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இவர் பிடெக் படித்து வந்துள்ளார். இந்த செயலியை உருவாக்கியது இவர்தான் என்று போலீசாரின் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

 எப்படி கைது?

எப்படி கைது?

இந்த Bulli Boi செயலி குறித்த விவரம் இணையத்தில் வெளியாகி அது பெரிய அளவில் சர்ச்சையானதும் நீரஜ் பிஷ்னோய் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். கல்லூரியில் இருக்காமல் அங்கிருந்து தப்பித்து நீரஜ் பிஷ்னோய் வீட்டிற்கு சென்று உள்ளார். அங்கு தனது போனை ஆப் செய்துவிட்டு முடங்கி உள்ளார். இவரின் ட்விட்டர் கணக்கில் இருந்த Bulli Boi செயலியின் புகைப்படங்களை வைத்து அதன் மூலம் ஐபி அட்ரஸ் கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் இவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

டெல்லி போலீஸ்

டெல்லி போலீஸ்

இது குறித்து டெல்லி போலீசார் தெரிவிக்கையில், நீரஜ் பிஷ்னோய்தான் இந்த செயலியை Github தளத்தில் உருவாக்கி உள்ளார். இவர்தான் அதன் மாஸ்டர்மைண்ட். இதை நீரஜ் பிஷ்னோய் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அவரின் கணினியில் இந்த செயலி உருவாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார். அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் முடிவில் இருக்கிறோம், என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 இஸ்லாமிய பெண்கள் ஏலம்

இஸ்லாமிய பெண்கள் ஏலம்

இதற்கு முன்பே இந்த வழக்கில் 19 வயது பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் முதல் மூன்று கைதுகளை மும்பை போலீஸ் மேற்கொண்டது. இதற்கு பின் வேறு ஒரு கூட்டம் இருக்கலாம் என்றும்மும்பை மற்றும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த செயலிக்கு பின் இருக்கும் வேறு குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக முயன்று வருகிறார்கள். டெல்லி போலீசால் கைது செய்யப்பட்ட நீரஜ் பிஷ்னோயை மும்பை போலீசும் சில நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+