ஆப்பில் பெண்கள் ஏலம்.. போலீஸ் விசாரணையில் Pant-ல் அசிங்கம் செய்த Bulli Bai.. "அதுக்கு" அடிமையாம்!
டெல்லி: இஸ்லாமிய பெண்களை ஏலம் விடும் Bulli Bai செயலியை நடத்தி வந்த நீரஜ் பிஷ்னோய் என்ற இளைஞர் குறித்து டெல்லி போலீசார் பரபரப்பு விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
Recommended Video
இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி ஏலம் விடும் Bulli Bai என்ற செயலி நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த Bulli Bai செயலியில் பல நூறு இஸ்லாமிய பெண்களின் புகைப்படத்தை பதிவேற்றி அதை ஏலம் விட்டுள்ளனர். இஸ்லாமிய பெண்களை அவமதிக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு செயலியை உருவாக்கி உள்ளனர்.
இந்த செயலியை நடத்தி வந்த விஷால் ஜா என்ற 21 வயது இளைஞர், 17 வயது இளம் பெண் ஆகியோர் ஏற்கனவே மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

யார் இவர்
இதையடுத்து இந்த செயலிக்கு பின் மாஸ்டர் மைண்டாக இருந்த 21 வயது இளைஞர் அசாமில் டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு மூலம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அந்த மாணவரின் பெயர் நீரஜ் பிஷ்னோய் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த செயலியை உருவாக்கியது இவர்தான் என்று போலீசாரின் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அசாம் மாநிலத்தில் போபாலில் இருக்கும் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இவர் பிடெக் படித்து வந்துள்ளார்.

சல்லி டீல் தொடர்பு
இந்த நிலையில் நீரஜ் பிஷ்னோய் சொந்த ஊர் ராஜஸ்தான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். Bulli Bai செயலி மட்டுமின்றி, முன்பு உருவாக்கப்பட்டு பின் தடை செய்யப்பட்ட Sulli Deals' செயலிக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இவரின் கணினியில் பல ஆயிரம் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் இருந்துள்ளன. நீரஜ் பிஷ்னோய் கணினியை சோதனை செய்ததில் போலீசாருக்கு பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவர் 15 வயதில் இருந்தே ஹேக்கிங் செய்து வருவதாக போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார்.

ஹேக்கிங்
தனது தங்கைக்கு பள்ளி ஒன்றில் அட்மிஷன் கிடைக்கவில்லை என்பதால் அந்த பள்ளியின் இணைய பக்கத்தை நீரஜ் பிஷ்னோய் 15 வயதிலேயே ஹேக்கிங் செய்து இருக்கிறார். அதன்பின் பல வருடமாக இப்படி பல இணைய பக்கங்களை ஹேக் செய்து இருக்கிறார். பெண்களின் பேஸ்புக் பக்கங்களையும் ஹேக் செய்துள்ளார். இவரின் கணினியை சோதனை செய்ததில் அதில் 153 ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. கணினி முழுக்க 18+ வீடியோக்கள், புகைப்படங்கள், ஆபாச கேம்கள் இருந்துள்ளன.

அடிமை
போலீஸ் விசாரணையில் தான் சுய இன்பத்திற்கும், ஆபாச வீடியோக்களுக்கும் அடிமை என்று நீரஜ் பிஷ்னோய் கூறியுள்ளார். முக்கியமாக தன்னை விட வயது கூடுதலாக இருக்கும் பெண்கள் மீது இவர் மோசமான ரீதியிலான பாலியல் உணர்வுகளை கொண்டு இருந்துள்ளார். வயதான பெண்கள், முக்கியமாக இஸ்லாமிய பெண்கள் மீது மிக மோசமான பாலியல் உணர்வுகளை இவர் கொண்டு இருந்ததாக போலீசார் விசாரணையில் நீரஜ் பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.

தற்கொலை
அதேபோல் போலீஸ் விசாரணையில் தான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று இவர் மிரட்டல் விட்டுள்ளார். இவர் மிகவும் தனிமையில் வளர்ந்தவர் என்றும், இவருக்கு நண்பர்கள் இருந்ததே இல்லை என்று போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கு வந்ததில் இருந்தே நீரஜ் பிஷ்னோய் எதுவும் சாப்பிடாமல் இருப்பதாகவும், மிகவும் திமிராக நடந்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அசிங்கம் செய்தார்
அதேபோல் போலீஸ் விசாரணையில் நீரஜ் பிஷ்னோய் பல முறை சிறுநீர் கழித்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொஞ்சம் அதட்டி கேள்வி கேட்டாலும் நீரஜ் பிஷ்னோய் சிறுநீர் கழித்துவிடுவார். அவருக்கு அடிக்கடி pant மாற்ற வேண்டியதாக இருந்தது. அவருக்கு உடல் ரீதியாக பிரச்சனை இருக்கிறதா என்று சோதித்தோம். ஆனால் இல்லை. ஆனாலும் அவர் போலீஸ் விசாரணை செய்யும் போதே சிறுநீர் கழித்துவிடுகிறார். அவரின் இந்த செயல்பாடு அதிர்ச்சி அளிக்கிறது என்று போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

கடினமாக இருந்தது
போலீஸ் விசாரணையில் நீரஜ் பிஷ்னோய் தான்தான் இந்த செயலியை நடத்தி வந்தேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் நான் செய்ததில் தவறு இல்லை.. இப்படித்தான் செய்வேன். இதுதான் நல்லது. அவர்களை (இஸ்லாமியர்களை) இப்படித்தான் நடத்த வேண்டும் என்று வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினார். போலீசார் விசாரணையின் போது சமயங்களில் இவர் மிகவும் மூர்க்கமாக நடந்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications