பைபாஸ் ஆபரேஷன்லாம் சாதாரணமாகி போச்சு.. மருத்துவ காரணம் சொல்லாதீங்க! செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி
டெல்லி: இதய அறுவை சிகிச்சை எல்லாம் இன்று குடல் வால் பகுதியை நீக்குவது போன்று சாதாரணமாகிவிட்டது என அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி திரிவேதி தெரிவித்தார்.
அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு 8 முறை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவர் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவ உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அவரது தம்பி தலைமறைவாக உள்ளதால் அவருக்கு ஜாமீன் கொடுத்தால் சாட்சி, ஆதாரங்களை கலைத்துவிடுவார் என்பதால் நீதிபதி ஜாமீன் தர மறுத்துவிட்டார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அமைச்சர் தரப்பு கூறியிருப்பதாவது" உடல்நல பாதிப்பை காரணம் காட்டியதை உயர்நீதிமன்றம் சரியாக ஆராயவில்லை. அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக இருப்பதை ஒரு காரணமாக கூறி ஜாமீன் மறுக்கப்பட்டது.
இதை ஏற்க முடியாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் முகுல் ரோத்தகி ஆஜரானார்.
அவர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அது போல் அவருடைய மருத்துவ அறிக்கைகளை இணைத்துள்ளோம். அதை நீதிமன்றமும் அமலாக்கத் துறையும் ஆய்வு செய்யலாம். செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போர்ட்டை சுட்டிக் காட்டி முகுல் ரோத்தகி வாதம் செய்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கானது டிசம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி இன்று திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தனது வாதத்தில், செந்தில் பாலாஜியின் உடல் நிலை பாதிப்பால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அவருக்கு கடந்த 18ஆம் தேதிதான் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்டால் இங்குதான் சிகிச்சை பெற வேண்டும். அங்குதான் சிகிச்சை பெற வேண்டும் என எந்த சட்டப்பிரிவும் சொல்லவில்லை. செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவரது மூளையில் ரத்தக் கட்டி உள்ளது.
அவருக்கு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என ரோத்தகி சொன்னார். அப்போது நீதிபதி திரிவேதி குறுக்கிட்டு " இந்த காலத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை எல்லாம் குடல் வால் நீக்க அறுவை சிகிச்சை போல் சாதாரணமாகிவிட்டது என்றார். எனவே மருத்துவ காரணங்களை கூறி தாக்கல் செய்த மனுவை ரத்து செய்த நிலையில் ஜாமீன் கோரும் சாதாரண மனுவை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications