"பெரிய ஹீரோன்னு நினைப்பா.. இப்பதான் அப்பா ஞாபகம் வருதா".. கோபம் காட்டிய கோர்ட்.. ஜாமீன் மறுப்பு
துப்பாக்கியால் சுட்ட ஷாருக் பதானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது
டெல்லி: "ஹீரோன்னு நினைப்பா.. அன்னைக்கு தப்பு செய்தபோது, எல்லோரையும் மறந்துட்டீங்க.. இப்பதான் உங்களுக்கு வயசான அப்பா ஞாபகத்துக்கு வருகிறாரா?" என்று, போலீசாரை துப்பாக்கியால் மிரட்டிய ஷாருக்கானுக்கு நீதிபதி ஜாமீன் தர மறுத்துவிட்டார்.. டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட ஷாருக் பதான் கோரிய ஜாமீன் மனுவில் நீதிபதி தனது காட்டத்தையும் வெளிப்படுத்தினார்.
சில மாதங்களுக்கு முன்புவரை டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தது.. அப்போது ஜாபர்தபாத் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனிலும் இந்த போராட்டம் வெடித்தது.

இது சம்பந்தமாக கலவரங்களும் ஜாப்ராபாத், மவ்ஜ்பூர் உள்ளிட்ட இடங்களில் நடந்து, 47 பேர் பலியாகிவிட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்... இந்தியா முழுவதுமே ஒருவித பரபரப்பு பீடித்து வந்தது.
அந்நேரம், டெல்லி வன்முறை சம்பவத்தின்போது இளைஞர் ஒருவர் போலீஸை நோக்கி துப்பாக்கியால் மிரட்டிய வீடியோ சோஷியல் மீடியாவில் படுவேகமாக பரவியது... முகமெல்லாம் ஆவேசம், கோபமுமாக காணப்பட்டார் அந்த இளைஞர்.. மொத்தம் 8 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வீடியோவை வைத்து அவர் யார் என்று அடையாளம் காணப்பட்டதில் பெயர் ஷாரூக் பதான் என்பதும், வயசு 23 என்றும் தெரியவந்தது. ஆனால் அந்த இளைஞரை காணவில்லை.. போலீசார் தேடிவந்த நிலையில்தான், உத்தரப்பிரதேசத்தில் ரே பரேலியில் பதுங்கியிருந்தது தெரிந்தது.. பிறகு சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து டெல்லி அழைத்து சென்றனர்.. ஜெயிலிலும் அடைத்தனர்.
இதையடுத்து, தனக்கு ஜாமீன் வேண்டும் என்று கோரி, டெல்லி ஹைகோர்ட்டில் ஷாருக் மனுதாக்கல் செய்தார்.. அந்த மனுவில் அவர் சொல்லி இருந்த காரணம், "என் அப்பாவுக்கு 76 வயசு.. முதியவர் என்பதால் அவரை பார்த்து கொள்ள யாருமே இல்லை.. அதனால் தனக்கு ஜாமீன் வேண்டும்" என்று கேட்டார்.
இதையடுத்து ஷாருக் வழக்கறிஞர் 'கர்ப்பமாக உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவியும் ஒருங்கிணைப்பாளருமான சூஃபுரா சர்க்காருக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் தரப்பட்டுள்ளது.. அதுபோலவே ஷாருக்குக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கோர்ட்டில் வாதாடினார்.
இது சம்பந்தமாக இன்று விசாரணை திரும்பவும் நடந்தது.. இருவரின் வாதங்களை நீதிபதி சுரேஷ்குமார் கெயித் ஏற்றுக் கொண்டார், ஆனால் ஜாமீன் தர மறுத்துவிட்டார்.. தனது உத்தரவில் இதை பற்றி கூறும்போது, "குற்றம் சாட்டப்பட்டவரின் நோக்கம் தன்னை ஹீரோவாக காட்டி கொள்வதிலேயே இருந்தது.. அதனால், இப்போது அவர் சட்டத்தையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்... தப்பு செய்தபோது, எல்லோரையும் மறந்து விட்டார்... இப்பதான் அவருக்கு வயசான அப்பா ஞாபகத்துக்கு வருகிறாரா என்று கேட்டு ஜாமீன் அளிக்கவும் மறுத்து உத்தரவிட்டார் நீதிபதி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications