ஒன்றாக சேர்ந்து தேசிய கீதம்.. டெல்லி ஜம்மா மசூதியில் நெகிழவைக்கும் சிஏஏ போராட்டம்.. செம வீடியோ
நேற்று டெல்லி ஜம்மா மசூதியில் நடைப்பெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் எல்லோரும் சேர்ந்து தேசிய கீதம் பாடியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
டெல்லி: நேற்று டெல்லி ஜம்மா மசூதியில் நடைப்பெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் எல்லோரும் சேர்ந்து தேசிய கீதம் பாடியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் மற்றும் மாணவ அமைப்புகள், அரசியல் கட்சிகள் தீவிரமாக போராடி வருகிறது. இன்னொரு பக்கம் நாடு முழுக்க பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் பல லட்சம் மாணவர்கள் போராடி வருகிறார்கள். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆங்காங்கே போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

நேற்று எப்படி
இந்த நிலையில் நேற்றும் நாடு முழுக்க பல இடங்களில் சிஏஏவிற்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. நேற்று மாலையில் இருந்து இரவு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்தது ஜேஎன்யூ மாணவர்கள் இரவு முழுக்க சிஏஏவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் சக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராடினார்கள்.

சிஏஏ எதிர்ப்பு
அதேபோல் உத்தர பிரதேசத்தில் உள்ள ஜாமியா மிலியா பல்கலையிலும் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று ஜம்மா மசூதியில் மாலையில் இருந்து இரவு வரை போராட்டம் களைகட்டியது.

மக்கள் போராட்டம்
பல நூறு பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களை விட இந்துக்கள்தான் அதிகமாக கலந்து கொண்டார்கள். ஜம்மா மசூதியில் உட்பக்கம் தொடங்கி வாசல் வரை மக்கள் நின்று கொண்டு இருந்தனர்.
|
கடைசியில் என்ன
போராட்டத்தின் இறுதியில் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக தேசிய கீதம் பாடினார்கள். இந்த விஷயம் பார்க்கவே கண்கொள்ளா கட்சியாக இருந்தது. இஸ்லாமியர்கள், இந்துக்கள் எல்லோரும் கைகோர்த்து தேசிய கீதம் பாடினார்கள். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications