சூர்ய சரோவர் யோஜனா திட்டத்துக்கு கேபினட் ஒப்புதல்.. நீரில் மிதக்கும் சோலார் பேனல்கள்.. என்ன ஸ்பெஷல்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதம மந்திரி சூர்ய சரோவர் யோஜனா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சூர்ய சரோவர் யோஜனா என்பது, நிலத்திற்குப் பதிலாக, ஏரிகள், நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் மேல் மிதக்கும் சூரிய ஒளி மின் தகடுகளை அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கேபினட் கூட்டத்தில் பிரதம மந்திரி சூர்ய சரோவர் யோஜனா (PM-SSY) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரூபாய் 5,070 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Pradhan Mantri Surya Sarovar Yojana

சூர்ய சரோவர் யோஜனா

சூர்ய சரோவர் யோஜனா திட்டம் நீர்நிலைகளின் மீது செயல்படுத்தப்படுவதால், தனியாக நிலம் தேவையில்லை. பொதுவாக சூரிய மின் உற்பத்திக்கு அதிக அளவில் நிலம் தேவைப்படுவது அதன் குறைபாடு. சூர்ய சரோவர் யோஜனாவில் மிதக்கும் சோலார் பேனல் முறையால் நிலப் பற்றாக்குறை சிக்கல் தவிர்க்கப்படுகிறது.

குறைந்தபட்சம் இரண்டு மணிநேர சேமிப்புத் திறன் அதாவது 10,000 MWh திறன் கொண்ட, அருகருகே அமைந்துள்ள ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுடன் கூடிய 5,000 மெகாவாட் மிதக்கும் சூரிய ஒளிமின்னழுத்தத் திட்டங்களை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

நிதி ஒதுக்கீடு

இந்த திட்டங்களுக்கு 2026-27 நிதியாண்டு முதல் 2030-31 நிதியாண்டு வரை ஒப்புதல் அளிக்கப்படும், மேலும் இதற்கான நிதி உதவி 2032-33 நிதியாண்டு வரை தொடர்ந்து வழங்கப்படும். தற்போது ரூபாய் 5,070 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மிதக்கும் சூரிய ஒளிமின்னழுத்தத் திட்டங்களுக்கு, ஒரு மெகாவாட்டிற்கு ரூ. 1 கோடி மத்திய நிதியுதவி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பயனடையும்.

சூர்ய சரோவர் யோஜனா திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

1. நீர்நிலைகள், வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் குளங்கள் மீது சூரிய மின் தகடுகள் அமைத்து சூர்ய மின்சக்தி உற்பத்தி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

2. தற்போது 700 மெகாவாட் மிதக்கும் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதனை அடுத்த 5 ஆண்டுகளில் 7 மடங்காக உயர்த்தி 5 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள மிதக்கும் சூரிய மின் தகடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

3. இந்த திட்டத்திற்கு மொத்தம் 5 ஆயிரத்து 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மெகா வாட்டுக்கு ரூ. 1 கோடி வரை மத்திய அரசு நிதி உதவி அளிக்கும்.

4. இந்த திட்டத்திற்கு கூடுதல் நிலங்கள் கையகப்படுத்த தேவையில்லை. இருக்கும் நீர்நிலைகள், கால்வாய்கள் மற்றும் குளங்களை பயன்படுத்தி மின்சார உற்பத்தியை பெருக்க முடியும்.

5. இந்த திட்டத்தால், மாசுபாடு குறையும். ஆண்டுக்கு சுமார் 1.10 கோடி டன் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு குறையும்.

6. நீர்நிலைகளில் நீர் ஆவியாதல் குறையும். பாசனம், தொழில்துறை மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீர் சேமிக்கப்படும்.

7. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 17,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும். சுயசார்பு இந்தியா திட்டம் இதன் மூலம் வலுவடையும்.

8. கட்டண அடிப்படையிலான திறந்த முறை போட்டி ஏலம் மூலமாக இத்திட்டங்கள் தேர்வு செய்யப்படும்.

9. ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்படுவதால் மின் விநியோகக் கட்டமைப்பின் நம்பகத்தன்மை வலுப்படும்.

10. இந்த திட்டம், நீர் வளங்களை உகந்த முறையில் பயன்படுத்த வழிவகுப்பதோடு, விக்சித் பாரத் தொலைநோக்குப் பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும்.

11. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை அதிகரிப்பதற்கும், தேசிய எரிசக்தி மற்றும் காலநிலை இலக்குகளை அடைவதற்கும் உதவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+