இந்தியாவுக்கு பெரிய வாய்ப்பு.. முதலை வாயிலிருந்து தப்பிக்குமா? இனி எதிர்காலம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரிக்ஸ் அமைப்பு சிறப்பான வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. மிக குறிப்பாக சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்ய தொடங்கியிருக்கிறது. இனி உலகமே சொந்த கரன்சி வர்த்தகத்தை நோக்கி திரும்ப இருக்கும் நிலையில், பிரிக்ஸை பயன்படுத்தி இந்தியா டாலரின் ஆதிக்கத்திலிருந்து வெளியே வருமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

சொந்த கரன்சி வர்த்தகத்தில் இந்தியாவுக்கு மிகவும் உதவியாக இருப்பது ரஷ்யாதான். நாம் இப்போது ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறோம். இதற்கு டாலரை கொடுப்பதில்லை. பதிலுக்கு இந்திய கரன்சியைதான் கொடுக்கிறோம். இருப்பினும் சொந்த கரன்சி பயன்பாட்டில் இந்த அளவுக்கு வர்த்தகம் போதுமானது கிடையாது.

BRICS RBI US

சொந்த கரன்சியில் வர்த்தகம்

ஏன் இது போதுமான அளவு கிடையாது என்பதற்கு முதலில், சொந்த கரன்சி வர்த்தகம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். கச்சா எண்ணெய் விஷயத்தையே இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை வாங்கினாலும், அரபு நாடுகளிலிடமிருந்தும் கொஞ்சம் வாங்குகிறது. நட்பு விட்டு போய்விடக்கூடாது அல்லவா!

ஆனால் இந்த வணிகத்தில், ரஷ்யாவிடம் வாங்கும் எண்ணெய்க்கு ரூபாய்தான் கொடுக்கப்படுகிறது. இதுவே அரபு நாடுகளிடமிருந்து வாங்கும் எண்ணெய்க்கு அமெரிக்க டாலரை கொடுக்கிறோம். டாலர் வேண்டும் எனில், நாம் காசு கொடுத்து வாங்க வேண்டும். இன்னைக்கு ஒரு டாலர் ரூ.85.98 என இருக்கிறது. நாளைக்கு இதன் விலை ஏறலாம். அப்பயெனில் நாம் இன்னும் கூடுதலாக செலவழித்து டாலரை வாங்க வேண்டும். சரி அப்படி வாங்கிய டாலரை வைத்து கூடுதலாக எண்ணெய்யை வாங்க முடியுமா? என்று கேட்டால் அதுதான் முடியாது.

இதுதான் டாலரில் இருக்கும் பிரச்சனை. இந்த பிரச்சனையால் இந்தியா மட்டும் கிடையாது உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த டாலரின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் வேலையை பிரிக்ஸ் நாடுகள் தொடங்கியுள்ளன.

பிரிக்ஸ் என்ன செய்கிறது?

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் சேர்ந்த அமைப்புதான் பிரிக்ஸ். இப்போது இந்த அமைப்பில் 11 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. புதியதாக ஈரானும், இந்தோனேஷியாவும் இணைந்திருக்கிறது. இந்த அமைப்புக்குள் சொந்த நாணயத்தில் வர்த்தகம் என்கிற கருத்து பரவலாக உள்ளது. எனவே இந்தியா இனி இந்த 11 நாடுகளில் வர்த்த்கம் செய்யும்போத ரூபாயை பயன்படுத்தினால் போதும். ஆனால், 11 நாடுகளும் இன்னும் முழுமையாக இந்த நடைமுறைக்குள் வரவில்லை.

11 நாடுகளும் சொந்த கரன்சியில் வர்த்தகத்தை செய்ய வைக்கும் வேலையைத்தான் தற்போது பிரிக்ஸ் செய்துக்கொண்டிருக்கிறது. இது 100% வெற்றியடையாது. ஆனால் 80% அளவுக்கு 11 நாடுகளும் சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்ய தொடங்கினாலே, டாலரின் ஆதிக்கம் ஆட்டம் காண தொடங்கும்.

இருப்பினும், இதை வைத்து மட்டுமே டாலரின் ஆதிக்கத்தை முழுமையாக வீழ்த்திவிட முடியாது. காரணம் டாலர் நாம் நினைப்பதை விட மிகவும் வலுவானது. சரி இதற்கு என்னதான் தீர்வு? பிரிக்ஸ் கரன்சிதான் தீர்வு.

பிரிக்ஸ் கரன்சி

பிரிக்ஸ் கரன்சி என்பது டாலரை போன்றதுதான். அதாவது பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் செய்துக்கொள்ளும் வணிகம் 100% அனைத்து நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்க இந்த கரன்சி பயன்படும். அதாவது இந்தியா ரூபாயை கொடுத்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை வாங்குகிறது. ரஷ்யா அதே ரூபாயை கொடுத்து இந்தியாவிலிருந்து மாம்பழத்தை வாங்குகிறது. ஆனால், ரஷ்யாவுக்கு பேரிட்சை பழமும் தேவை. இந்தியாவில் ஏது பேரிட்சை?

எனவே ஈரானிடம் பேரிட்சை பழத்தை வாங்க ரஷ்யா முயலும், கையில் இந்திய ரூபாய் இருக்கிறது. இதனை ஈரான் ஏற்றுக்கொள்ளாது. இப்படி சிக்கல்கள் வரும். எனவே, பிரிக்ஸ் கரன்சி என்கிற ஒன்று வந்துவிட்டால், அதை வைத்து 11 நாடுகளிலிலும் பொருட்களை வாங்கலாம், விற்கலாம்.

இதில் நடைமுறை சிக்கல் என்னவெனில், சீனாவுடன் நாம் இந்த பிரிக்ஸ் கரன்சியை பகிர்ந்துக்கொள்ள வேண்டும். இது மட்டும்தான். ஆனால் நமக்கு காரியம் ஆக வேண்டும் எனில் சீனாவுடன் ஒத்துழைப்பதில் பிரச்சனை இல்லை. இந்த முடிவை இந்தியா எடுத்தால், இந்தியாவின் தயாரிப்புகள் உலக அளவில் சிறப்பாக வர்த்தகமாகும்.

இப்போது வரை இந்திய ஆட்சியாளர்கள் பிரிக்ஸ் கரன்சியில் நுழைய எங்களுக்கு விருப்பம் இல்லை என கூறி வருகிறார்கள். இந்தியா தனது யோசனையை மறு பரிசீலனை செய்தால், சிறப்பாக இருக்கும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+