Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பிரம்மபுத்திரா நீரை நிறுத்தும் சீனா? இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானுக்கு ஆதரவாக பிரம்மபுத்திரா நதியை நிறுத்துவது குறித்து சீனா அச்சுறுத்தியுள்ளதாகக் கடந்த சில காலமாகச் செய்திகள் பரவி வருகிறது. இதற்கிடையே பிரம்மபுத்திரா நதி விவகாரம் தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அவரது விளக்கம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாகச் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்தும் இந்தியா விலகியது. இதனால் பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய நீர் பஞ்சம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்த விவகாரத்தில் சீனா களமிறங்கலாம் எனத் தகவல் வெளியானது.

Can China stops Brahmaputra Water Supporting Pakistan Will it affect India Himanta Sarma explains

பிரம்மபுத்திரா

அதாவது சிந்து நதி நீரை இந்தியா பிளாக் செய்தால்.. பிரம்மபுத்திரா நதியைச் சீனாவும் நிறுத்தலாம் என்பது போல பெய்ஜிங்கில் உள்ள சீனா மற்றும் உலகமயமாக்கல் மையத்தின் துணைத் தலைவர் விக்டர் ஜிகாய் காவ் தெரிவித்திருந்தார். கடந்த சில நாட்களாகவே இது இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இதற்கிடையே பிரம்மபுத்திரா நதி விவகாரம் தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். பிரம்மபுத்திரா நதி விவகாரம் தொடர்பாக ஆதாரமில்லாத தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் விரிவான பதிவைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹிமந்தா பிஸ்வா சர்மா விளக்கம்

இது தொடர்பாக ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவிற்கு பிரம்மபுத்திரா நதி நீரைச் சீனா நிறுத்தினால் என்ன செய்ய முடியும்? பாகிஸ்தான் அச்சுறுத்தலை ஏற்படுத்த இதுபோன்ற தகவலைப் பரப்பி வருகிறது. காலாவதியான சிந்து நதி நீர் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகிய பிறகு, பாகிஸ்தான் இப்போது மற்றொரு கற்பனையான அச்சுறுத்தலைப் பரப்பி வருகிறது. சரி, இந்தியாவிற்கு வரும் பிரம்மபுத்திரா நதி நீரைச் சீனா நிறுத்தினால் என்ன செய்வது? இந்த கட்டுக் கதைக்கான பதிலை நாம் தேசிய தெளிவுடன் பார்ப்போம்.

பிரம்மபுத்திரா: இந்தியாவில் வளரும் ஒரு நதி பிரம்மபுத்திரா. இது இந்தியாவில் சுருங்காது.. வளரவே செய்கிறது! பிரம்மபுத்திராவின் மொத்த நீர் வரத்தில் சீனாவின் பங்களிப்பு 30-35% மட்டுமே இருக்கிறது. அதுவும் பெரும்பாலும் பனிப்பாறை உருகுதல் மற்றும் திபெத்திய மழை பொழிவு மூலம் மட்டுமே அது நடக்கிறது.

வாய்ப்பே இல்லை

மீதமுள்ள 65-70% நதி நீர் இந்தியாவிற்குள் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.. அருணாச்சலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பெய்யும் பருவமழை இதற்குக் காரணம். மேலும் சுபன்சிரி, லோஹித், கமெங், மனாஸ், தன்சிரி, ஜியா-பராலி, கோபிலி போன்ற முக்கிய துணை நதிகளும் இதற்குக் காரணமாகும்.

காசி, காரோ மற்றும் ஜெயந்தியா மலைகளிலிருந்து கிருஷ்ணாய், திகாரு மற்றும் குல்சி போன்ற ஆறுகள் வழியாகவும் கூடுதல் நீர்வரத்து கிடைக்கிறது. இந்திய-சீன எல்லையில் நீர்வரத்து ~2,000-3,000 m³/s ஆக இருக்கும். அதேநேரம் அசாம் சமவெளிகளில் (குவஹாத்தி போன்ற இடங்களில்): மழைக் காலங்களால் நீர்வரத்து 15,000-20,000 m³/s என அதிகமாகவே இருக்கிறது. அதாவது பிரம்மபுத்திரா நதி என்பதால் சீனாவில் இருந்து வரும் நீரைச் சார்ந்து இருக்கும் நதி அல்ல.. அது மழையால் இயங்கும் இந்திய நதி அமைப்பு, இந்திய எல்லைக்குள் நுழைந்த பிறகு பிரம்மபுத்திரா மேலும் பலமானதாகவே மாறுகிறது.

இந்தியாவுக்கு நல்லதுதான்

பாகிஸ்தான் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை: சீனா நீர் ஓட்டத்தைக் குறைத்தால் (சீனா இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை) கூட அது உண்மையில் அசாமில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உதவவே செய்யும். இந்த வெள்ளம் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை இடம்பெயர வைக்கிறது. அதைக் கட்டுப்படுத்தலாம்.

பதறும் பாகிஸ்தான்

இதற்கிடையில், சிந்து நீர் ஒப்பந்தத்தின் கீழ் 74 ஆண்டுகளாகப் பலனைப் பெற்று வந்த பாகிஸ்தான், இப்போது இந்தியா தனது இறையாண்மை உரிமைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால் பீதி அடைந்துள்ளது. ஒரு விஷயத்தைப் பாகிஸ்தான் மறந்துவிடக்கூடாது.. பிரம்மபுத்திரா என்பது ஒரே ஒரு இடம் மூலம் கட்டுப்படுத்தப்படவில்லை.. அது நமது இந்தியாவின் புவியியல், நமது பருவமழை ஆகியவை மூலமே இயக்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது பிரம்மபுத்திரா நதியைச் சீனா நிறுத்துவதால் இந்தியாவுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், அப்படியே நிறுத்தினாலும் அது இந்தியாவுக்கு நன்மையையே தரும் என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+