100 ஆண்டுகளுக்கு பிறகு ஹோலி பண்டிகையில் வரும் சந்திர கிரகணம்! எப்படி பார்ப்பது? விஞ்ஞானிகள் விளக்கம்
டெல்லி: இந்த ஆண்டுக்கான முதல் சந்திரகிரகணம் இன்று ஏற்படுகிறது. நாடு முழுவதும் ஹோலி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்று சந்திரகிரகணம் ஏற்படுவது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
சந்திர கிரகணம் என்பது ஒரு சிறப்பான அரிய வானியல் நிகழ்வாகும். ஆனால், இந்தியா போன்ற பாரம்பரிய கலாச்சாரங்கள் நிறைந்த நாடுகளில் கிரகணங்கள் குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக, இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோ பங்குனி உத்தர நாளாகும். இந்த நாளில் கிரகணம் வருவது குறித்து பல்வேறு விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.

பங்குனி உத்தர நாளில், ஹோலி கொண்டாடப்படும் போது சந்திர கிரகணம் ஏற்படுவது மிகவும் அரிதான விஷயம் என்றும், இதற்கு முன்னர் இப்படிய ஒரு சந்திர கிரகணம் நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் சொல்லப்படுகிறது. எனவே, இன்று உணவு எடுத்துக்கொள்ளுதல் தொடங்கி, வெளியே செல்லுதல் வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த சந்திர கிரகணத்தை எப்படி பார்ப்பது என்பது விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணங்கள் ஏற்படும். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது படும். இதைத்தான் சந்திர கிரகணம் என்று சொல்கிறார்கள். இதில் முழு சந்திர கிரகணம், பகுதி நேர சந்திர கிரகணம் என இரண்டு வகைகள் உண்டு. இன்று ஏற்படப்போவது பகுதி நேர சந்திர கிரகணம். அதாவது, பெனும்பிரல் சந்திர கிரகணம்.
அதாவது பூமியின் நிழல் முழுமையாக சந்திரன் மீது விழாமல், பூமியின் நிழலின் வெளிப்புற விளிம்புகள் மட்டும் சந்திரன் மீது விழும். இதனால் நிலவு முழுமையாக மறையாது. இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் காணமுடியாது. ஆனால் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் காண முடியும்.
இந்த சந்திர கிரகணம், இந்திய நேரப்படி காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 03:02 வரை 4 மணி 36 நிமிடங்கள் வரை நீடிக்கும். இந்தியாவில் பகல் பொழுது இருப்பதால் இதனை பார்க்க முடியாது. மேற்குறிப்பிட்ட நாடுகளில், உயர் திறன் கொண்ட தொலை நோக்கியை வைத்து இதை மிக தெளிவாக பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சூரிய கிரகணத்தைதான் வெறும் கண்களில் பார்ப்பது ஆபத்தானது. சந்திர கிரகணம் வெறும் கண்களில் பார்க்கலாம். கிரகணத்தை தெளிவாக பார்க்க, உயரமான இடங்களில் இருக்க வேண்டும். அதேபோல மேகமூட்டம் எதுவும் இருக்கக்கூடாது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications