டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்!

பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேர்தலை மையமாக வைத்து, பாலிவுட், கோலிவுட் ஆகிய சினிமா துறையினர் நிறைய படம் வெளியிட இருக்கிறார்கள். அந்த வரிசையில் மிக முக்கியமான படமாக பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படம் பார்க்கப்படுகிறது.

மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஓமங் குமார் இயக்கத்தில் ''பிஎம் நரேந்திர மோடி'' படம் வெளியாக உள்ளது. இந்த படம் இப்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் விவேக் ஓப்ராய் ஹீரோவாக நடிக்கிறார்.

"பிரியங்கா பிரியங்கா பிரியங்கா".. குழந்தைக்கு பெயர் வைத்து இடுப்பில் தூக்கி கொஞ்சிய ஜோதிமணி

 அப்போதே வைரல்

அப்போதே வைரல்

இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. பிரதமர் மோடியை இந்த படத்தில் சூப்பர் ஹீரோ போல சித்தரித்து இருந்தனர். அதேபோல் இதில் மோடி குஜராத் கலவரம் குறித்து பேசும் விஷயங்களும் அடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 6ம் தேதி இந்த படம் வெளியாகும் என்று நாள் குறிக்கப்பட்டது.

தடை

தடை

இந்த நிலையில் இந்த படத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. தேர்தல் நேரத்தில் இப்படி படம் எடுப்பது விதிமுறை மீறல் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல் டெல்லி ஹைகோர்ட்டில் இது தொடர்பாக பல்வேறு மனுதாரர்கள் சார்பாக பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.

 என்ன தீர்ப்பு

என்ன தீர்ப்பு

இந்த நிலையில் பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் தேர்தல் விதிமீறல் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதனால் பி.எம் நரேந்திர மோடி படம் திட்டமிட்டபடி வெளியாக உள்ளது.

 ஏற்கனவே இப்படி

ஏற்கனவே இப்படி

பாஜகவின் பிரச்சாரத்தை பலப்படுத்தும் வகையில் ஏற்கனவே சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி, யூரி - தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் படம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிரான தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படம் ஆகியவை வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்னொரு படமான ''தாக்கரே'' பாஜகவின் கூட்டணியான சிவ சேனா கட்சிக்கு ஆதரவாக எடுக்கப்பட்டது.

English summary
Green Signal For BJP: Can't stay the release of PM Narendra Modi movie order Delhi High Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X