25 செகன்ட்டில் "ஆயிரத்தில் ஒருவன்" ஆகணுமா.. இந்த படத்தில் மறைந்திருக்கும் பூவை கண்டுபிடியுங்கள்!
டெல்லி: இந்த படத்தில் மறைந்திருக்கும் சிறிய பூவை 25 வினாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். இதெல்லாம் ஆயிரத்துல ஒருத்தராலத்தான் முடியும்.
ஆப்டிக்கல் இல்லூஷன்கள் சில நாட்களாக சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ஒரு படத்தை கொடுத்துவிட்டு அதில் மறைந்திருக்கும் பொருட்களை கண்டுபிடிப்பது, மறைந்திருக்கும் எழுத்துகளை கண்டுபிடிப்பது என்பதுதான் ஆப்டிக்கல் இல்லூஷன் ஆகும்.
பொருளையும் எழுத்தையும் கண்டுபிடிப்பது பெரிய விஷயமா.. அதெல்லாம் ஜுஜுபி என சொல்லாதீர்கள். அதை கண்டுபிடிக்க பொறுமையும் விவேகமும் புத்திகூர்மையும் அவசியமாகும்.

சவால்கள்
பெரும் சவால்களை கொண்டுள்ள ஆப்டிக்கல் இல்லூஷன்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். சரி வாருங்கள், நாம் ஒரு ஆப்டிக்கல் இல்லூஷனை பார்க்கலாம். ஒரு படம் இருக்கிறது. அதில் சிவப்பு, வெள்ளை கொண்ட சிறிய கட்டங்கள் உள்ளன, சீஸ், கூடைகள், தட்டுகள். கோப்பைகள், ஸ்டிராபெர்ரி, திராட்சை, பர்கர், ஹாட் டாக் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.

பூவை கண்டுபிடியுங்கள்
இந்த படத்தில் மறைந்திருக்கும் சிறியதொரு பூவை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 25 வினாடிகள்தான் டைம். அதற்குள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த படம் சமூக ஊடகங்களில் வைரலானது. சிலர் நிமிடக்கணக்கில் தேடியும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜூம் செய்து பார்த்தாலும் அந்தளவுக்கு நுணுக்கமாக கண்டறிய முடியவில்லை.

பூவே இல்லையா
இதனால் பலர் இந்த படத்தில் பூவே இல்லை என்றெல்லாம் கூறி குழம்பினர். அவர்கள் குழம்புவது இருக்கட்டும், நீங்களாவது 25 வினாடிக்குள் கண்டுபிடித்தீர்களா என சொல்லுங்கள். என்ன கண்டுபிடித்தாயிற்றா? சரி நாங்களே சொல்லிவிடுகிறோம். வலது மூலையில் இரு பர்கர்களுக்கு நடுவே வெள்ளை நிறத்தில் பூ இருக்கிறது.

என்ன மக்களே
என்ன மக்களே எதிர்பார்க்கவில்லையா! இதுவரை 0.1 சதவீதம் பேர் மட்டுமே 25 வினாடிகளில் பூவை கண்டுபிடித்தனர். இது போல் மூளைக்கும் வேலை கொடுத்து நம்மை குழப்புவதுதான் ஆப்டிக்கல் இல்லூஷன் எனப்படும் ஒளியியல் மாயையாகும். இந்த படத்தை பிரிட்டிஷ் மண்பாண்ட நிறுவனமான portmeirion அறிமுகப்படுத்தியது. இதை picnic puzzle என அழைக்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications