இந்த படத்தில் இருக்கும் வார்த்தையை கண்டுபிடிங்க பார்ப்போம்! புத்திசாலிகளுக்கு மட்டும்தான் தெரியுமாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த படத்தில் மனிதனின் முகத்தில் இருக்கும் வார்த்தையை மட்டும் கண்டுபிடித்து விடுங்கள் பார்ப்போம். அவ்வாறு செய்துவிட்டால் நீங்கள் உண்மையில் அறிவாளிதான்.

உங்கள் மூளைக்கு ஒரு வேலை கொடுக்கிறோம். அதாவது ஒரு மனிதனின் முகத்தில் உள்ள எழுத்து என்ன என்பதை கூறுங்கள் பார்ப்போம். பொதுவாக ஆப்டிக்கல் இல்லூஷன் எனும் ஒளியியல் மாயையானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான எண்ணங்களை தோற்றுவிக்கும்.

அது போல் எல்லாருடைய கண்களும் ஒரே மாதிரியாக பார்க்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பார்ப்பார்கள். இது போன்ற படங்கள் நம் அறிவுத் திறனை அதிகரிக்கும்.

 ஒளியியல் மாயை

ஒளியியல் மாயை

இதுபோன்ற ஒளியியல் மாயை படத்தை முதலில் கண் பார்ப்பதை நம் மூளை ஒப்புக் கொள்ளும். இங்குதான் ஒளியியல் மாயையின் டிரிக்ஸ் இருக்கிறது. உங்கள் கண்களையும் எண்ணத்தையும் முட்டாளாக்குகிறது. இந்த மனிதனின் முகத்தை பார்க்கும் போது உங்களுக்கு சாதாரணமாக தோன்றும்.

 முகத்தில் இருக்கும் வார்த்தை

முகத்தில் இருக்கும் வார்த்தை

அதே இந்த முகத்தில் மறைந்திருக்கும் வார்த்தையை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என கூறினால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். இது சாதாரண புகைப்படம் அல்ல, அந்த புகைப்படத்தில் ரகசிய வார்த்தை மறைந்திருக்கிறது. அதெப்படிங்க ஒரு முகத்தில் வார்த்தை ஒளிந்திருக்கும் என நீங்கள் கேட்கலாம்.

 ஆப்டிக்கல் இல்லூஷன்

ஆப்டிக்கல் இல்லூஷன்

அதற்கு எங்களுடைய ஒரே பதில் அதுதான் ஆப்டிக்கல் இல்லூஷன். இந்த புகைப்படம் முதலில் சமூகவலைதளங்களில் வைரலானது. இதில் அந்த வார்த்தையை தேடி மக்கள் தங்கள் தலையை பிய்த்து கொண்டார்கள். இந்தபடத்தில் காட்டப்பட்டுள்ள 3 படங்களிலும் ஒரே வார்த்தை உள்ளது.

கண்டுபிடி

கண்டுபிடி

அந்த படங்களை பல்வேறு கோணங்களில் பாருங்கள். என்ன கண்டுபிடிக்க சிரமமாக இருக்கிறதா, அதில் மறைந்திருக்கும் வார்த்தை நீங்கள் படித்திராததோ இல்லை கேள்விப்படாததோ இல்லை. சரி நாங்கள் உங்களுக்கு ஒரு க்ளூ கொடுக்கிறோம். அப்பயாவது சரியாக கண்டுபிடிக்கிறீர்களா என பார்ப்போம். சாரி சாரி எழுத்துகள் இருக்கிறதையாவது கண்டுபிடிக்கிறீர்களா என பார்ப்போம்.

 என்ன வார்த்தை

என்ன வார்த்தை


அதாவது படத்தின் இடது பக்கம் மூக்கு பகுதியிலிருந்து பாருங்கள். எழுத்துகள் லோயர் கேஸாகவும் இருக்கலாம், அப்பர் கேஸாகவும் இருக்கலாம். என்ன கண்டுபிடித்துவீட்டீர்களா? மறைந்திருக்கும் வார்த்தை LIAR என்ற வார்த்தைதான். மூக்கு பகுதியை பாருங்கள் l போல் இருக்கிறதா, மூக்கின் துவாரங்களின் நிழல் i போன்று இருக்கிறதா, மேல் உதடும் கீழ் உதடும் a போன்றும் , தாடை முதல் தொண்டை வரையிலான பகுதி r போன்றும் இருக்கிறதா? இதை வெகு சிலரே கண்டுபிடிப்பார்கள். நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் இதை கண்டுபிடித்த 1 சதவீத மக்களில் நீங்களும் ஒருவர்தான் போங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+