Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு நிமிஷம் உற்று பாருங்க.. ஒட்டக சிவிங்கி தெரிகிறதா? உங்கள் கண்களை சோதிக்கும் சூப்பர் ட்ரிக்ஸ்!

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒளி மாயை படத்தை பார்த்த 20 வினாடிக்குள் நீங்கள் படத்தில் ஒளிந்திருக்கும் ஒட்டக சிவிங்கியை கண்பிடித்தீர்கள் என்றால் நீங்கள் கண்காணிப்பு திறன் அதிகம் உள்ளவர்கள் தான்.

பொதுவாக சமூக வலைத்தளங்களில் மக்களின் செயல்பாடுகாடுகள் அதிகரித்ததில் இருந்து, எப்போதும் ஏதாவது ஒரு விஷயம் டிரெண்ட் ஆகி நெட்டிசன்களுக்கு தீனி போட்டு கொண்டுதான் இருக்கும்.

அதிலும் மிக சுவாரசியமான சம்பவமாக இருந்தால் மட்டுமே சமூக வலைத்தளத்தில் இருப்பவர்கள் அதனை டிரெண்ட் செய்வர்.

 டிரெண்டிங் வீடியோக்கள்

டிரெண்டிங் வீடியோக்கள்


அந்த வகையில் வித்தியாசமான வீடியோக்கள், மனித நேயமிக்க செயல்களுக்கு பலர் வரவேற்பு தெரிவிப்பனர். இது மட்டும் அல்லாது மூளைக்கு பயிற்சி அளிக்கக்கூடிய வகையிலான சில புதிர்களுக்கும் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இதில் ஒருசிலர் நமது புத்திசாலித் தனத்தை எப்படியாவது முதல் ஆளாக நிரூபித்து காட்டிவிட வேண்டும் என புதிர்கள், ஆப்டிகல் இல்லூஷன் என சொல்லப்படும் ஒளி மாயைய்கள் உள்ளிட்ட பதிவுகளையும் விரும்பி வருகின்றன. இது தொடர்பான படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகிக்கொண்டு தான் இருக்கின்றன.

 மறைந்திருக்கும் ஒட்டக சிவிங்கி

மறைந்திருக்கும் ஒட்டக சிவிங்கி

அந்த வகையில், தற்போது ஆப்டிகல் இல்லூசன் எனப்படும் ஒளி மாயைக்கான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் 'ஒரு காட்டுக்குள் ஒட்டகச்சிவிங்கி ஒன்று மறைந்திருக்கிறது' என்பது தான். இந்த புகைப்படத்தில் மறைந்திருக்கும் ஒட்டக சிவிங்கியை கண்டுபிடிப்பது தான் நனது கண்காணிப்பு திறன் எந்த அளவில் இருக்கிறது என்பதை கணக்கிடுகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த 20 வினாடிக்குள் நாம் காட்டுக்குள் இருக்கும் ஒட்டகச்சிவிங்கியை கண்டுபிடித்தோம் என்றால் திறமைசாலி தான், கண்காணிப்பு திறன் அதிகம் உள்ளவர்தான்.

 கண்டுபிடிக்க முதல் குழு

கண்டுபிடிக்க முதல் குழு

படத்தை நாம் முதலில் பார்க்கும் போது நம் கண்களுக்கு தென்படுவது, சுற்றிலும் ஏராளமான மரங்கள் இருப்பதையும், புல் நிறைந்த காட்டினையும் தான். ஆனால், இந்த பசுமையான காட்டுக்குள் ஒளிந்திருக்கும் ஒட்டக சிவிங்கியை கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகத் தான் இருக்கிறது. இதனால், அந்த ஒட்டக சிவிங்கியை 20 வினாடிக்குள் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு முதல் குழு ஒன்று அளிக்கப்படுகிறது. ஒட்டகச்சிவிங்கி மரத்தின் பின்னால் நிற்கின்கிறது என்பது தான் முதல் குறிப்பு. மேலும் அதன் கழுத்தின் நீளம் அது ஒளிந்திருக்கும் மரத்தினை விட நீளமானது ஆகும். இதன் மூலம் நீங்கள் எளிதில் ஒட்டக சிவிங்கியை கண்டுபிடித்திட முடியும்.

 2-வது குழு

2-வது குழு

இந்த குழுவிலும் ஒட்டக சிவிங்கியை கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு 2-வது குழு ஒன்று அளிக்கப்படுகிறது. இந்த குழுவில் கிட்டத்தட்ட புகைப்படத்தை பார்க்கும் அனைவராலும் கண்டுபிடிக்க முடியும். பார்வையாளர்கள் படத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டக சிவிங்கி இருப்பதை காணலாம். இது ஒரு மரத்தின் அமைப்பு போலவே ஒரு தத்ரூபமான முறையில் வைக்கப்பட்டுள்ளதால் பார்ப்பவர்களுக்கு முதலில் தெரியாதபடி தோன்றும். நனது கண்காணிப்பு திறனை சோதிக்கும் முயற்சியாக இந்த படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+