"9000 மடங்கு விஷம்!" ஆன்லைனில் வாங்கும் வெள்ளியால் கேன்சர் ஆபத்து.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களில் குறைந்த விலையில் விற்கப்படும் வெள்ளி நகைகளில் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய காட்மியம் என்ற நச்சுத்தன்மை கொண்ட உலோகம் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் 1000 மடங்கு அதிகம் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது பெரும் விவாதமாக மாறியுள்ளது.

இந்த காலத்தில் நாம் ஷாப்பிங் செய்யும் முறையே மொத்தமாக மாறி வருகிறது. நேரடியாக கடைகளுக்கு சென்று வாங்கும் பழக்கம் குறைந்து வரும் நிலையில், ஆன்லைன் மூலம் வாங்கும் பழக்கமே அதிகரித்து வருகிறது. இருப்பினும், ஆன்லைன் மூலம் வாங்கும்போது அதன் தரத்தை நம்மால் உறுதி செய்ய முடிவதில்லை. அப்படியொரு பகீர் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

Silver India cancer Cancer risk

சில்வர் நகைகள்

ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் 925 ஸ்டெர்லிங் சில்வர் என்ற பெயரில் விற்கப்படும் சில நகைகளில் கேன்சர் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் காட்மியம் என்ற நச்சுத்தன்மை கொண்ட உலோகம் இருக்கிறது. அதுவும் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் 1000 மடங்கு அதிகம் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த தி சண்டே டைம்ஸ் இணையதளம் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் அமேசான் மற்றும் டிக்டாக் தளங்களில் விற்கப்பட்ட நகைகளை வாங்கி, அதை சோதனை செய்துள்ளனர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.387க்கு விலைக்கு விற்கப்பட்ட ஸ்டெர்லிங் சில்வர் மோதிரத்தில்.. 92.3% காட்மியம் இருப்பது கண்டறியப்பட்டது.

9000 மடங்கு அதிகம்

உண்மையில் 925 சில்வர் என்று அழைக்கப்பட வேண்டும் என்றால்.. அதில் குறைந்தபட்சம் 92.5% வெள்ளி இருக்க வேண்டும். ஆனால் இந்த மோதிரத்தில் வெள்ளிக்கு நச்சுத்தன்மை கொண்ட காட்மியம் இருக்கிறது. இது இங்கிலாந்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 0.01% என்ற வரம்பை விட 9,000 மடங்குக்கும் அதிகமாகும். அதேபோல் திபெத் சில்வர், 999 சில்வர் என்று விற்கப்பட்ட பொருட்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் 5,000 மடங்கு அதிக காட்மியம் இருந்தது தெரிய வந்துள்ளது.

மேலும், மெடல் அலாய் என விற்கப்பட்ட கம்மல் உள்ளிட்ட பொருட்களிலும் பல மடங்கு அதிக நச்சு உலோகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல டிக்டாக் ஷாப்பில் "925 சில்வர்" என்று விற்கப்பட்ட பொருட்களில் 33% வரை காட்மியம் இருந்தது. இது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவை விட 3,300 மடங்கு அதிகமாகும்.

ஏன் ஆபத்து

காட்மியம் என்பது பொதுவாக பேட்டரிகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஒரு உலோகமாகும். இந்த உலோகம் நமது உடலில் கலக்கும் போது நமக்கு சிறுநீரக பாதிப்பு, எலும்பு பலவீனம் அடைவது, நுரையீரல் மற்றும் பிற புற்றுநோய் அபாயம், உடலின் உறுப்புகள் சேதமடைதல் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகள் கூட ஏற்படும்!

இது தொடர்பாக லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி பேராசிரியர் கிறிஸ்டர் ஹோக்ஸ்ட்ராண்ட் கூறுகையில், "பாதரசத்தை விட காட்மியம் மிகவும் ஆபத்தானது. இது நமது உடலில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும்! குறிப்பாக குழந்தைகளுக்கு இதை நாம் போட்டுவிட்டால் அது இன்னுமே ஆபத்து. ஏனென்றால் அவர்கள் இந்த நகைகளை வாயில் வைப்பார்கள். அல்லது விழுங்கும் ஆபத்தும் இருக்கிறது. அப்போது உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது" என்றார்.

அதிரடி நடவடிக்கை

இந்த தகவல் வெளியான உடனேயே இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வகை வெள்ளியை விற்பனை செய்து வந்த நபருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே இந்த வகை சில்வரை வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களும் இதை திரும்பி தரவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+