கேன்சருக்கான தடுப்பூசி ரெடி.. 6 மாதத்தில் அமல்.. பெண்களுக்கு குட்நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர்..

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி என்பது 5 முதல் 6 மாதத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். 9 வயது முதல் 16 வயது நிரம்பிய சிறுமிகள் இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் கூறியுள்ளார்.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் (கேன்சரால்) பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆண்டுதோறும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றனர்.

cancer vaccine

குறிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கு அதிக பணம் தேவையாக உள்ளது. ஆனால் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தோரால் இந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

நம் நாட்டை பொறுத்தவரை ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோயால் அதிகமாக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே தான் புற்றுநோயை தடுக்கும் வகையிலான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிய தொடங்கியது

இதுதொடர்பாக மத்திய சுகாதாரம், குடும்ப நல்வாழ்வு மற்றும் ஆயுஷ் நலத்துறை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நம் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்துள்ளது.

இதனை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மருத்துவமனைகள், டே கேர் மையங்களில் புற்றுநோய் கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் புற்றுநோய்க்கான சுங்க கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

நம் நாட்டில் கேன்சருக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் உள்ளது. தற்போது தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி என்பது இன்னும் 5 முதல் 6 மாதத்தில் அமலுக்கு வரும். இந்த தடுப்பூசியை 9 வயது முதல் 16 வயது நிரம்பிய சிறுமிகள் செலுத்தி கொள்ளலாம்'' என்றார்.

இந்த தடுப்பூசி எந்த வகையான புற்றுநோயை தடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்,‛‛தடுப்பூசி என்பது மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+