அமெரிக்காவில் பிரதமர் மோடியை சந்திக்கிறாரா டிரம்ப்? வெளியுறவுத்துறை கொடுத்த ரியாக்சன் இதுதான்
டெல்லி: மூன்று நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்காவிற்கு செல்லும் பிரதமர் மோடியை, தான் சந்திக்க இருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இது குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பிரதமர் மோடியை டிரம்ப் சந்திக்கிறாரா? இல்லையா? என உறுதியான எந்த தகவலையும் கூறாமல் மழுப்பலான பதிலை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

கடந்த வாரத்தில் கமலா ஹாரீஸ் - டொனால்டு டிரம்ப் இடையே நேரடி விவாதம் நடைபெற்றது. இந்த அதிபர் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி கமலா ஹாரிஸ் கையே ஓங்கியிருப்பதாக சில கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. டொனால்டு டிரம்ப் மீது இருமுறை கொலை முயற்சி, பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் என அமெரிக்க அதிபர் தேர்தல் உலகம் முழுக்க கவனம் பெற்றிருக்கிறது.
இத்தகைய பரபரப்புக்கு இடையே, பிரதமர் மோடி வரும் 21 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். மூன்று நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்.
அமெரிக்க பயணத்தின் போது, ஐநா பொதுச்சபையில் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 'எதிர்கால உச்சி மாநாடு 2024' என்கிற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. இதிலும் மோடி பங்கேற்கிறார். இந்த நிலையில் தான், அமெரிக்காவிற்கு வரும் இந்திய பிரதமர் மோடியை, தான் சந்திக்க இருப்பதாக டொனால்டு டிரம்ப் கூறினார். மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் கூறியதாவது:-
"அடுத்த வாரம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன். பிரதமர் மோடி அற்புதமானவர்" என்றார். இருந்த போதிலும் இந்த சந்திப்பு எங்கே நடைபெறும்? எப்போது நடைபெறும்? என்ற எந்த தகவலை அவர் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இன்று இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், "மோடியை சந்திக்க போவதாக டிரம்ப் கூறிய தகவலை ஏற்கவோ, மறுக்கவோ இல்லை. பிரதர் மோடிக்கு பலருடன் சந்திப்பு உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை ஒழுங்குப்படுத்தும் முயற்சியில் இருக்கிறோம்" என மழுப்பலான பதிலை சொல்லிவிட்டது.
டொனால்டு டிரம்ப் - மோடி இடையேயான சந்திப்பு கடைசியாக 2020ல் நடைபெற்றது. டிரம்ப் இந்தியா வந்திருந்த போது இந்த சந்திப்பு நடைபெற்றது நினைவு கொள்ளத்தக்கது. டிரம்ப் தனது பிரசார கூட்டத்தில் இந்தியாவுடனான வர்த்தக உறவு குறித்து பேசுகையில், இறக்குமதி வரி விவகாரத்தில் அமெரிக்காவை இந்தியா அவமதிப்பதாக சாடியிருந்தார். இத்தகைய சூழலில் மோடியை டிரம்ப் சந்திக்க இருப்பதாக கூறியது கவனம் பெற்றுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications