காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 9000 கன அடி நீர்.திறக்க மேலாண்மை வாரியம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்திற்கு கர்நாடகம் திறக்க வேண்டிய காவிரி நீர் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.. அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 9 ஆயிரம் கனஅடி நீரை திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 9 ஆயிரம் கனஅடி காவிரி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் நடைபெற்றது.

Cauvery Water Cauvery Water Management Authority Karnataka Water Release Tamil Nadu Cauvery Water

இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு கர்நாடகா எவ்வளவு நீரை திறக்க வேண்டும் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 9000 கன அடி நீர் திறக்க மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது, தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது.. கர்நாடக அரசு, உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முறையாக செயல்படுத்தவில்லை என தமிழக அரசு குற்றஞ்சாட்டியது.

அதன்படி, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், "கர்நாடகா தனது விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடுகிறது. ஆனால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை மட்டும் திறக்கவில்லை.. இதனால் தமிழகத்திற்கு உரிய விகிதாச்சாரப்படி காவிரி நீர் கிடைக்கவில்லை" என்று வாதிட்டார்.

அப்போது, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தின் நீர் கோரிக்கையை அந்த ஆணையத்திடம் எழுப்பலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.. பிறகு
இந்த வழக்கை அடுத்த வாரம் திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அதற்குள் நீர் திறப்பு தொடர்பான புதிய புள்ளிவிவரங்களை 2 தரப்பினரும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக, ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தினமும் 12 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்திற்கு திறக்குமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை கர்நாடகா செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றமும் ஆகஸ்ட் 17-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், 12 ஆயிரம் கனஅடி என்ற முந்தைய உத்தரவுக்குப் பிறகு இப்போது 9000 கனஅடி நீரை திறக்க ஆணையம் பரிந்துரை செய்யதுள்ளது த முக்கியத்துவம் பெற்றுள்ளது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+