காவிரி மேலாண்மை ஆணையம்.. மத்திய அரசின் ஏஜெண்ட் போல் நடக்கிறது.. அமைச்சர் துரைமுருகன் அதிரடி!
டெல்லி: காவிரி மேலாணையம் ஆணையம் மத்திய அரசின் ஏஜெண்ட் போல் நடக்கப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் ஜூன் 17ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியது. அதோடும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.

ஜூலை 22ல் கூட்டம்
தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஜூன் 17, ஜூன் 23 மற்றும் ஜூலை 6 என 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு எதிர்ப்பு
இதனிடையே தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகள் மற்றும் அணைகளை பார்வையிட்ட காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர், காவிரி ஆணையத்தில் மேகதாது அணை குறித்து விவாதிப்போம் என பதில் அளித்தார். இதற்கு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். தொடர்ந்து மத்திய நீர் வளத்துறை அமைச்சரை தமிழக சட்டமன்ற குழுவினர் சந்தித்து பேசினர்.

நீதிமன்றம் விசாரணை
இந்த நிலையில், மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடத்த தடையில்லை. வரும் 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க கூடாது என்று உத்தரவிட்டது. கடந்த 2018ம் ஆண்டில் இருந்து மேகதாது பிரச்னை தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. ஒருவாரம் ஒத்திவைத்தால் ஒன்றும் ஆகிவிடாது.

துரைமுருகன் பேச்சு
மேகதாது அணை விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தை அறிய விரும்புகிறோம் என கூறி வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தின் கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் கலந்துகொள்வார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை.
மேகதாது விவகாரத்தை திடீரென கர்நாடகா அரசு கையில் எடுத்துள்ளது. மேகதாது வழக்கின் அடுத்த விசாரணையில் தமிழகம் விரிவான வாதத்தை முன்வைக்கும். காவிரி மேலாண்மை வாரியம் நியாயமாக நடக்கவில்லை. அவை மத்திய அரசின் ஏஜெண்ட் போல் செயல்படுகிறது என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications