இன்று நடக்கிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம்.. தமிழ்நாட்டுக்கு ஏன் முக்கியம்?
டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 60-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரியில் திறக்கப்பட்ட நீர் தரவுகள் அடிப்படையில் விவாதம் நடைபெறுகிறது. கூடுதலாக நீர் திறக்க வலியுறுத்தி தமிழக அதிகாரிகள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் முறையிட உள்ளனர்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 60-வது கூட்டம் இன்று (அக்டோபர் 23ஆம் தேதி) டெல்லியில் நடைபெறுகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் காவிரியில் திறக்கப்பட்ட நீர் தரவுகள் அடிப்படையில் விவாதம் நடைபெறும். மேலும் கர்நாடகாவில் ஹேரங்கி அணையில் நீர் தேக்குவது தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு தொடர்பாகவும் விவாதம் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் வடநெரே தலைமையிலான உயர் அதிகாரிகள், தமிழகத்துக்கு உரிய பங்கீட்டு நீரை வழங்குவதில் நிலவும் குறைபாடுகள் மற்றும் நீர் பற்றாக்குறை தொடர்பான விவரங்களை ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளனர்.
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் மற்றும் பற்றாக்குறை நீர் தொடர்பாக தமிழக அதிகாரிகள் இந்த கூட்டத்தின் போது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்த உள்ளனர். கூடுதலாக நீர் திறக்க வலியுறுத்தி தமிழக அதிகாரிகள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் முறையிட உள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வப்போது கூடி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீர முழுமையாக வழங்கப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் முழுமையாக சென்று சேரவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் கூடுதல் நீர்த் தேவைக்காக இன்று நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
