காவிரி விவகாரம்.. "நாங்க தலையிட மாட்டோம்.." உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொன்ன முக்கியமான கருத்து!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரின் பங்கை அதிகரிப்பது தொடர்பான வழக்குகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தான் தமிழக அரசு எழுப்ப வேண்டும் என்ற உச்சநீதிமன்றம், இதில் நேரடியாக தலையிட மறுத்துவிட்டது.

கர்நாடகா தமிழகத்துக்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

Cauvery Water Dispute

நீர் கிடைக்கவில்லை

அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி, தமிழகத்துக்கு உரிய அளவு நீர் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். அவர் மேலும், "நாங்கள் பெற வேண்டிய அளவுக்கு சரியான விகிதாச்சார நீரை பெற வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சரியான அளவு காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடவில்லை" என்றும் அவர் வாதிட்டார்.

இதை கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு எழுப்பலாம் என்று தெரிவித்தனர். அப்போது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெற்ற உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கர்நாடக வழக்கறிஞர்

கடந்த விசாரணையின்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டதற்கான விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த விவரங்களை வைத்தே காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதாக இன்றைய தினம் விசாரணையின் போது நீதிமன்றம் குறிப்பிட்டது.

ஆனால் தமிழக அரசு சார்பில், "காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விகிதாச்சார அடிப்படையில் நீரை திறந்துவிட உத்தரவிடவில்லை. தமிழக அரசால் விவசாயிகளுக்கு ஒரு சொட்டு நீரைக்கூட வழங்க முடியவில்லை. அவர்கள் (கர்நாடகா) விவசாயிகளுக்கு நீரை திறந்து விடுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது தான் நீர் அளவு குறித்த பிரச்சினையை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் எழுப்புமாறு குறிப்பிட்ட நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், அடுத்த விசாரணையின்போது இரு மாநிலங்களும் நீர் திறப்பு தொடர்பான தற்போதைய நிலவரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

காவிரி நீரை திறக்கணும்!

முன்னதாக, ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகா உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. ஆகஸ்ட் 12 முதல் 15 நாட்களுக்கு தினமும் 12,000 கனஅடி காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டிருந்தது. இந்த முடிவை காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் உறுதி செய்தது.

கடந்த ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற ஒழுங்காற்று குழு கூட்டத்தில், ஜூலை 29 முதல் 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி நீரை கர்நாடகா திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை பிலிகுண்டுலுவில் பதிவான நீர்வரத்து 158 முதல் 550 கனஅடி வரை மட்டுமே இருந்ததாக தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்திருந்தது.

நீர் அளவு

இதை குறிப்பிட்டே தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் கிடைக்கவில்லை என்று தமிழக அரசு கூறி வருகிறது. கர்நாடகாவின் கேஆர்எஸ், கபினி, ஹாரங்கி மற்றும் ஹேமாவதி அணைகளில் ஆகஸ்ட் 3ஆம் தேதி மொத்தமாக 77.537 டிஎம்சி நீர் இருப்பதால் தமிழகத்துக்கான விகிதாச்சார நீரை திறப்பதில் கர்நாடகாவுக்கு சிரமம் இருக்காது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய மழையையும் கணக்கில் கொண்டால், பிலிகுண்டுலுவில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய விகிதாச்சார நீர் 26.954 டிஎம்சியாக இருக்க வேண்டும் என்றும் ஆனால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒதுக்கிய 4.536 டிஎம்சி நீரை மட்டுமே ஒதுக்கிய நிலையில், அது மிகவும் குறைவு என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+