20 டிஎம்சி நீரை மடைமாற்றம் செய்துள்ளது கர்நாடகா.. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நிலை அறிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்திற்கு விகிதாச்சாரம் அடிப்படையில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறக்காமல் கர்நாடக அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நிலை அறிக்கையினை தாக்கல் செய்துள்ளது. அதில், நிலுவையில் உள்ள 17.604 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் முதல் 80.41 டிஎம்சி நீர் கிடைத்திருக்க வேண்டும், ஆனால் 25.59 டிஎம்சி நீர் மட்டுமே எங்களுக்கு கிடைத்தது. கால்வாய், தடுப்பணைகள் மூலம் 20 டிஎம்சி நீரை கர்நாடக அரசு மடைமாற்றம் செய்துள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Cauvery water Karnataka must release 17 6 TMC of water Tamil Nadu government files status report in Supreme Court

காவிரியில் நீர் திறக்க வேண்டும்

காவிரி நீர் திறந்துவிடுவதில் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பிரச்சினை நிலவி வருகிறது. காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான அளவு நீரை விடுவிக்காமல், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுகளையும் மதிக்காமல் கர்நாடகா அரசு தண்ணீரை திறப்பது இல்லை. உபரி நீரை மட்டுமே திறந்து விட்டு வருகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. அதாவது காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வீதம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை பின்பற்ற கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை

ஆனாலும் கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் கூறியபடி கூட தண்ணீர் திறக்கவில்லை என தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் காவிரி மேலாண்மை ஆணையமே பாரபட்சமான உத்தரவை தான் பிறப்பித்து இருந்தது. ஆனால் அதை கூட கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை.

தமிழகத்தின் கோரிக்கையினை ஏற்றுக் கொள்ளாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த 15 நாட்களுக்கு 9,000 கன அடி நீர் மட்டுமே திறந்துவிட கூறியிருந்தது. வறட்சி காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் நீரை பகிர வேண்டும் என்ற விதியை காவிரி மேலாண்மை ஆணையம் பின்பற்ற தவறிவிட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த இந்த பாரபட்சமான உத்தரவினை கூட கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை.

77.604 டிஎம்சி நீரை திறக்க வேண்டும்

கர்நாடக அரசு வழக்கமாக ஜூன் முதல் தற்போது வரை 80.41 டிஎம்சி நீரை திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் 25.59 டிஎம்சி நீர் மட்டுமே இதுவரை எங்களுக்கு கிடைத்துள்ளது. கால்வாய், தடுப்பணைகள் மூலம் 20 டிஎம்சி நீரை கர்நாடக அரசு மடைமாற்றம் செய்துள்ளது. எனவே நிலுவையில் உள்ள 77.604 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிட வேண்டும்" என்று தமிழக அரசு நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+