கடைமடைக்கு போகாத மேட்டூர் நீர்! தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தண்ணீர் தரணும்! கர்நாடகாவுக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும், இன்னும் கடைமடை வரை நீர் போய் சேரவில்லை. இதையடுத்து அடுத்த 15 நாட்களுக்கு காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

தமிழகத்திற்கு போதுமான அளவுக்கு நீர் திறக்கப்பட வேண்டும் என்று, இதற்கு முன்னர் பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடக அரசு பெரிய அளவில் மதிக்கவில்லை. இப்படி இருக்கையில் தற்போது புதிய உத்தரவை கர்நாடக எப்படி செயல்படுத்தப்போகிறது? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

Cauvery water

காவிரி நீரும் குறுவை சாகுபடியும்

காவிரி நீரை நம்பிதான் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெறுகிறது. ஆனால், இந்த ஆண்டு போதுமான அளவுக்கு கர்நாடகா நீரை கொடுக்காததால் மேட்டூர் அணை இந்த ஆண்டு லேட்டாகவே திறக்கப்பட்டது. இதன் காரணமாக குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை. கடைமடை மாவட்டங்களான நாகை, திருவாரூரில் இன்னும் குறுவை சாகுபடி தொடங்கவே இல்லை. காரணம் மேட்டூர் நீர் இன்னும் கடைமடைக்கு சென்றடையவில்லை என்பதுதான்.

அதேநேரம் கால்வாயிலிருந்து மோட்டார் மூலம் நீர் எடுக்க கூடாது என்றும் அதிகாரிகள் கூறியிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். போதுமான அளவுக்கு நீர் திறக்கப்பட்டால்தான் அது கடைமடை வரைக்கும் போகும். நாங்கள் மோட்டார் வைத்து எடுக்கும் சிறிதளவு நீரால் கடைமடைக்கு போகும் நீர் தடுக்கப்படாது. எனவே பயிரிட்ட எங்களுக்காவது உரிய நீரை கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இப்படி இருக்கையில் வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+