மேக தாது அணை பற்றி விவாதிக்க தமிழகம் எதிர்ப்பு! 3-வது முறை காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ரத்து!
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதே இதற்கு காரணமாகும்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் நாளை நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.

காவிரி ஆணையம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஜூன் 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுடன் அக்கூட்டத்தில் மேகதாது அணை குறித்தும் விவாதிக்கப்படும் என்று ஆணையம் கூறி இருந்தது. இதனையடுத்து, மேகதாது அணை பற்றி விவாதம் கூடாது என்று தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து அந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு ஜூன் 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

மீண்டும் மாற்றம்
காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக இருக்கும் எஸ்.கே.ஹெல்தர் மேகதாது அணை விவகாரத்தில் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் என கடும் எதிர்ப்புகள் தமிழகத்திலிருந்து கிளம்பியதால் அந்தக் கூட்டமும் இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டு ஜூலை 6-ஆம் தேதியான நாளைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இப்போது மூன்றாவது முறையாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் ரத்து செய்யப்பட்டு மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் எதிர்ப்பு
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதே இதற்கு காரணமாகும். மேகதாது அணை பற்றி பேச காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எந்த உரிமையும் இல்லை எனக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதமும் எழுதியிருக்கிறார்.

16-வது கூட்டம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது. இம்மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்திலோ இக்கூட்டம் நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது..
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?












Click it and Unblock the Notifications