தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் திறப்பில் கர்நாடகா தகிடுதத்தம்?அக்.30-ல் காவிரி ஒழுங்காற்று குழு ஆய்வு!
டெல்லி: காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் வரும் 30-ந் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான உரிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டதா? இல்லையா? என்பது ஆய்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவை அமைக்கப்பட்டன. காவிரியின் குறுக்கே கர்நாடகா கட்டிய அணைகளின் நீர் இருப்பு, கர்நாடகா மழைப் பொழிவு ஆகியவற்றை கணக்கிட்டு தமிழ்நாட்டுக்கான நீரை திறப்பதற்கு பரிந்துரைக்கும் பணியை ஒழுங்காற்று குழு மேற்கொள்ளும். ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடும். இதுதான் தற்போதுவரையிலான நடைமுறை.

தமிழ்நாடு தரப்பில் 24,000 கன அடி நீரை காவிரி நீரை திறக்க கோரப்பட்டது. ஆனால் வெறும் 5,000 கன அடி நீரை மட்டும் காவிரி ஒழுங்காற்று குழு திறக்க பரிந்துரைத்தது. இதனடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையமும் உத்தரவிட்டது. இதனை கர்நாடகா ஏற்காமல் சொற்ப நீரை திறந்தது. இதன் பின்னர் உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடியது. அப்போதும் கர்நாடகாவுக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டது. இதனையும் கர்நாடகா மதிக்காமல் சொற்ப நீரை திறந்துவிட்டது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா பாஜக போராட்டங்களைத் தூண்டிவிட்டது. பல்வேறு பந்த் போராட்டங்களும் நடத்தப்பட்டன. மண்டியாவில் இன்றும் 46 நாட்களைத் தாண்டி போராட்டங்கள் தொடருகின்றன. இந்தப் போராட்டங்களில் மாணவர்களையும் கோர்த்துவிட்டனர் கன்னட விவசாயிகள், கன்னட இனவாத அமைப்புகள்.
பின்னர் 3,000 கன அடிநீரை திறக்க உத்தரவிட்ட போது சொட்டு நீரையும் தரமாட்டோம் என்றது கர்நாடகா. காவிரி ஒழுங்காற்று மீண்டும் ஆய்வு செய்து மேலும் 3,000 கனஅடி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க உத்தரவிட்டது. இதனையும் கர்நாடகா மதிக்கவில்லை. பின்னர் திடீரென தமிழ்நாட்டுக்கான நீர் திறப்பை அதிகரிப்பது, குறைப்பது என போக்கு காட்டி வருகிறது கர்நாடகா. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் ஏமாற்றமும் வேதனையும் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் வரும் 30-ந் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை எவ்வளவு கர்நாடகா திறந்துவிட்டுள்ளது? என்பதை முழுமையாக ஒழுங்காற்று குழு ஆய்வு செய்ய இருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications