திகார் சிறைக்கு அனுப்புங்க.. காவல் நீட்டிப்பு வேண்டாம்.. சிபிஐ கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற சிபிஐயின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை சிபிஐ காவலில் செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
சிபிஐ காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் அல்லது கடும் நிபந்தனைகளுடன் கூடிய வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.

சிபிஐ
இதையடுத்து நீதிபதி கூறுகையில் சிதம்பரம் தனது ஜாமீன் மனுவை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார். பின்னர் சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். அப்போது இன்று ஒரு நாள் வரை நீதிமன்றக் காவலை நீட்டித்த சிபிஐ நீதிமன்றம் இன்று பிற்பகல் விசாரிப்பதாக தெரிவித்தது.

கோரிக்கை
இந்த நிலையில் சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப உச்சநீதிமன்றம் விதித்த தடையை சிபிஐ உச்சநீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்தது. சிபிஐயின் கோரிக்கை குறித்து இன்று விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

சிபிஐ காவல்
அதன்படி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனுவை தாக்கல் செய்தது. திகார் சிறைக்கு செல்லமாட்டேன் என ப.சிதம்பரம் கூறுவதா? அவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க விருப்பமில்லை.

காவல் நீட்டிப்பு
திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என சிபிஐ வாதிட்டது. எனினும் சிபிஐயின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்தின் காவலை நீட்டித்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications