Vijay: மென்று விழுங்கி One line Answer தந்த விஜய்? ஆதாரம் கேட்ட சிபிஐ! இன்றே முடியாத விசாரணை?
டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ எழுப்பிய கேள்விகளுக்கு தவெக தலைவர் விஜய் அளித்த பதில்களுக்கு ஆதாரத்தை கொடுக்குமாறு சிபிஐ அதிகாரிகள் கேட்டதாக பல்வேறு டிவி ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சிபிஐயின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் திணறிய விஜய், நிறுத்தி நிதானமாக பதில் சொல்லி வருவதாக சொல்லப்படுகிறது.
கரூர் விவகாரத்தில் விஜய்யிடம் சிபிஐ இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. அதில் விஜய்யிடம் ஏராளமான கேள்விகளை கேட்டு திக்குமுக்காட வைப்பதாகவும் தெரிகிறது.

"அவ்வளவு கூட்டத்தினூடே ஏன் வாகனத்தை செலுத்த சொன்னீர்கள், வாகனத்தின் மேலே இருந்த உங்களுக்கு நிலைமை மோசமானது தெரியவில்லையா? அபாயத்தை தடுக்க என்ன முயற்சி எடுத்தீர்கள் 7 மணி நேரம் தாமதமாக சென்றது ஏன் என்றும் நிலைமை மோசமடைந்த நிலையிலும் ஏன் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து பேசினீர்கள், கண் எதிரே கூட்ட நெரிசலை பார்க்கவில்லையா? என சிபிஐ அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தனர்.
பெரும்பாலான கேள்விகளுக்கு விஜய் ஒரு வரியில் விடை கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் சில கேள்விகளுக்கு விஜய் சொன்ன பதிலால் திருப்தியடையாத சிபிஐ அதிகாரிகள் அவரிடம் ஆதாரத்தை கேட்டதாக சொல்லப்படுகிறது.
சிபிஐ கேட்கும் ஆதாரங்களை சமர்ப்பிக்க விஜய் தரப்பு கால அவகாசம் கேட்டதாக தெரிகிறது. மேலும் விஜய்யிடம் இன்றே அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டு அவர் இன்று மாலையே சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விஜய்யிடம் விசாரணை தொடரும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் விஜய்யின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன. கரூர் விவகாரத்தில் சிபிஐயின் முதல் குற்றப்பத்திரிகை வரும் பிப்ரவரி மத்தியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
பெரும்பாலான கேள்விகளுக்கு விஜய், தமிழக காவல் துறையை கை காட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும் சில கேள்விகளுக்கு நிறுத்தி நிதானமாகவே பதில் அளித்து வருகிறாராம்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ஏற்கெனவே தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன், ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் கடந்த ஆண்டு சிபிஐ 3 நாட்கள் விசாரணை நடத்தியிருந்தது.
இதைத் தொடர்ந்து விஜய் ஜன.12 ஆம் தேதி ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அவர் ஆஜராகாமல் வேறு யாரையாவது அனுப்பலாமா என கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் சிபிஐ அதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்.
இதையடுத்து விஜய் கடந்த ஜன 11 ஆம் தேதி டெல்லி சென்றார். பிறகு அடுத்த நாள் 12 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக கூறியிருந்த நிலையில் அவர் அரை மணி நேரம் தாமதமாக ஆஜரானார்.
அன்றைய தினம் அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது அவரிடம் அடுத்த நாளும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் ஆஜராகுமாறு தெரிவித்தனர். ஆனால் விஜய்யோ, சென்னை கட்சி சார்பில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அதில் கலந்து கொள்ள விலக்கு அளிக்குமாறு கேட்டார்.
அதற்கு சிபிஐ அனுமதி அளித்தது. ஆனால் பொங்கல் முடிந்து சம்மன் அனுப்பினால் ஆஜராக வேண்டும், எந்த சாக்கு போக்கும் கூற கூடாது என சொல்லியே சிபிஐ அனுமதி தந்ததாம். இந்த நிலையில் விஜய் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி நேற்றைய தினமே விஜய் சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் டெல்லி சென்றார். இதையடுத்து இரவு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவர் இன்று காலை 10.30 மணிக்கெல்லாம் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகிவிட்டார்.












Click it and Unblock the Notifications