ஒரு அதிகாரிக்காக சிபிஐயை ஆட்டிப்படைக்கும் அரசு.. அஸ்தானா மீதான மோடியின் சாஃப்ட் கார்னர்!
சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவிற்கு ஆதரவாக பிரதமர் மோடி தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video

டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவிற்கு ஆதரவாக பிரதமர் மோடி தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் இதனால் விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ இயக்குனராக செயல்படுவார்.

முக்கியமானவர்
இந்த வழக்கில் மிக முக்கியமான நபர் என்றால் அதிக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாதான். அவர்தான் இந்த வழக்கில் சிறப்பு இயக்குனர் அஸ்தானாவிற்கு எதிரான ஆதாரங்களை திரட்டியது. அவரது டீம்தான் அஸ்தானாவிற்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இந்த நிலையில்தான் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா விடுப்பில் செல்லும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்கள்
அதேபோல் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் டீமில் இருந்து கொண்டு அஸ்தானாவிற்கு எதிரான சாட்சியங்களை திரட்டிய எல்லோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். முக்கியமாக அஸ்தானாவிற்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த எஸ்பி அஜய் பாசியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தலைமையில்தான் நேற்று முதல்நாள் சிபிஐ அலுவலகத்தில் ரெய்டு நடந்தது.

செல்ல பிள்ளை
சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது மத்திய அரசு இவ்வளவு பாசம் கொள்ள நிறைய காரணம் இருக்கிறது. ராகேஷ் அஸ்தானா, குஜராத்தை சேர்ந்தவர். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை இவர்தான் விசாரணை செய்தது. மோடிக்கு நெருக்கமான இந்தியாவின் டாப் அதிகாரி இவர்தான். இவரை சிபிஐக்கு மாற்றியது பாஜகதான். 2017ல் இவர் சிபிஐக்கு நேரடியாக மாற்றப்பட்டதோடு, சிபிஐயின் சிறப்பு இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.

பல கேள்விகள்
இந்த வழக்கில் அஸ்தானாவிற்கு ஆதரவாக பாஜக செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். இவர்கள் இதற்கு பின்வரும் காரணங்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
1. அஸ்தானாவை பணியில் இருந்து நீக்காமல் விடுப்பில் செல்ல சொன்னது.
2. அஸ்தானாவிற்கு எதிரான அனைத்து அதிகாரிகளையும் இடம்மாற்றியது.
3. முக்கியமான சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை விடுப்பில் செல்ல சொன்னது.
4. அஸ்தானா வழக்கை விசாரித்த அஜய் பாசியை பணியிட மாற்றம் செய்தது.
5. அஸ்தானாவிற்கு நெருக்கமானவர்களையே அவருக்கு எதிரான வழக்கை விசாரிக்க நியமித்து இருப்பது, ஆகிய முக்கியமான விஷயங்கள்தான் இந்த கேள்வியை எழுப்பி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications