சிபிஐ vs சிபிஐ வழக்கு: மத்திய அரசின் நடவடிக்கை சரியா?.. உச்ச நீதிமன்றத்தில் காரசாரம்!
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா கொடுத்த பதில் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது.
Recommended Video

டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா கொடுத்த பதில் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது. இதில் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா கட்டாய விடுப்பில் செல்ல வைக்கப்பட்டது சரியா என்று காரசார விவாதம் செய்யப்பட்டது.
குஜராத்தில் தொழிலதிபர் மொயின் குரேஷி பண மோசடி வழக்கில் சிக்கிய காரணத்தால் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பு உள்ளது என்று கூறி சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ நடவடிக்கை எடுத்தது. இதில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் உத்தரவின் பேரில் சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்தது. அதே சமயம் அலோக் வெர்மா மீது ராகேஷ் அஸ்தானா ஊழல் மற்றும் லஞ்ச புகார் அளித்தார்.

பெரிய பிரச்சனை
இதனால் இயக்குனருக்கும், சிறப்பு இயக்குனருக்கும் இடையில் பிரச்சனை வந்தது. இதனால் மத்திய அரசு சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பித்தது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ பொறுப்பு இயக்குனராக செயல்படுவார் என்று கூறியது. இந்த கட்டாய விடுப்பிற்கு எதிராக இயக்குனர் அலோக் வெர்மா வழக்கு தொடுத்தார்.

விசாரணை நடந்து வருகிறது
கடந்த ஒரு மாதமாக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தனது கட்டாய விடுப்பிற்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் ஒரு கட்டமாக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை விஜிலென்ஸ் அமைப்பு விசாரணை செய்தது. சிபிஐ இயக்குனர் தொடர்பான விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

பதில் மனு
இந்த அறிக்கை மீதான பதில் மனுவை சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா சென்ற வாரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் அலோக் வெர்மா கொடுத்த பதில் மனுவின் விவரங்கள் மீடியாக்களில் கசிந்தது சர்ச்சையானது. இதையடுத்து பதில் மனு மீது விசாரணை நடத்தாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று விசாரணை
இந்த நிலையில் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா கொடுத்த பதில் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது. இந்த பதில் மனு கசியவில்லை, அது தனியாக அளித்த பேட்டியின் விவரங்கள் என்று ஏற்கனவே அலோக் வெர்மா தரப்பு விளக்கம் அளித்தது. அதேசமயம் பதில் மனுக்களை வெளியே அளிப்பதிலும் தவறு கிடையாது என்று அலோக் தரப்பு தெரிவித்தது. இதையடுத்து, உங்கள் வழக்கை விசாரிக்க தயார் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மிகப்பெரிய தவறு
அலோக் வெர்மா சார்பாக ஆஜரான நாரிமன் கூறுகையில், மத்திய அரசுக்கு சிபிஐ இயக்குனரை விடுப்பில் செல்ல வைக்க அனுமதி, அதிகாரம் கிடையாது. தேர்வு வாரியத்திற்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது. எந்த தவறு செய்திருந்தாலும் சிபிஐ இயக்குனரை, மத்திய அரசு விடுப்பில் செல்ல வைக்க முடியாது என்று கூறினார்.

அதிகாரம் இல்லை
இதையடுத்து மனுதாரர் காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுனா கார்க்கே சார்பாக ஆஜரான கபில் சிபில், மத்திய அரசு சிபிஐ இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. 2 வருட பதவிக்காலம் முடியும் வரை மத்திய அரசு எதுவும் செய்ய கூடாது. அப்படியே சிபிஐ இயக்குனர் பெரிய தவறு செய்தாலும், தேர்வு வாரியம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு இதில் பெரிய அதிகாரம் இல்லை என்று கூறினார்.

ஆனால் மத்திய
ஆனால் மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கேகே வேணுகோபால், அரசுக்கு சிபிஐ இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க எல்லா உரிமையும் இருக்கிறது. தேர்வு கமிட்டி என்பது தேர்வு மட்டுமே செய்ய முடியும். அதனால் மத்திய அரசு செய்தது சரிதான் என்று கூறினார். இதையடுத்து இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரம் புதன் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications