செப்டம்பர் 22 முதல் சிபிஎஸ்இ மறுதேர்வு.. 10 & 12-ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிபிஎஸ்இ 10 & 12-ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் 28 வரை தேர்வு நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் 29 வரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் மறுத்தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்து இருந்தது. இந்த தேர்வை குறிப்பிட்ட சில பாடங்களில் எதிர்பார்த்த மதிப்பெண்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மறு தேர்வு ரத்து

மறு தேர்வு ரத்து

இந்நிலையில் மறுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

12 மாணவர்கள் எழுதுவர்

12 மாணவர்கள் எழுதுவர்

அப்போது, சிபிஎஸ்இ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரூபேஷ் குமார், மறுதேர்வு செப்டம்பர் மாதம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் விளக்கம் அளித்தார். மேலும் கடந்த ஆண்டு 575 மையங்களில் தேர்வு நடைபெற்றதாவும், இந்த முறை 1278 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், ஒரு வகுப்பறையில் 12 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சிபிஎஸ்இ-க்கு உத்தரவு

சிபிஎஸ்இ-க்கு உத்தரவு

இந்த வாதத்தை கேட்ட கான்வில்கர் தலைமையிலான நீதிபதிகள், மறுதேர்வு நடத்தும் விவகாரத்தில் வரும் 7-ம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தேர்வு அட்டவணை

தேர்வு அட்டவணை

இந்நிலையில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் 28 வரை தேர்வு நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் 29 வரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மறுதேர்வை 1.5 லட்சம் மாணவர்களும், 12ம் வகுப்பு மறுதேர்வை 87 ஆயிரம் மாணவர்களும் எழுத உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+