இனி 2 டேர்ம் தேர்வு.. சிபிஎஸ்இ 10 & 12ம் வகுப்பு கல்வி ஆண்டு 2 பருவங்களாக பிரிப்பு.. சிபிஎஸ்இ முடிவு
டெல்லி: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு இரண்டு பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு பருவங்களாக இறுதி தேர்வு பிரித்து நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஒன்றரை வருடமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டான். இந்த நிலையில் தேர்வுகள் நடத்தப்படாமல் போவதை தவிர்க்க சிபிஎஸ்இ புதிய முடிவை எடுத்துள்ளது.

முடிவு
அதன்படி இனி சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு இரண்டு பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாதியில் 50% பாடங்கள் நடத்தப்படும். பின்னர் அதற்கான தேர்வுகள் நடக்கும். பின் மீதி பாதி பாடங்கள் நடத்தப்பட்டு அதற்கான தேர்வுகள் நடக்கும்.

இரண்டு பிரிவுகள்
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் போல, இனி இரண்டு பருவங்களாக இறுதி தேர்வு பிரித்து நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் 2021-22 கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ முதல் டேர்ம் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதத்திலும், இரண்டாம் டேர்ம் தேர்வு அடுத்த வருடம் மார்ச் ஏப்ரலில் நடக்கும். இதற்கு ஏற்றபடி பாடங்கள் இரண்டாக பிரிக்கப்படும்.

பாடம்
பாடங்களை 50% சதவிகிதமாக பிரிக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அவர்களின் அறிவுறுத்தலின்படி பாடங்கள் பிரிக்கப்பட்டு கற்பிக்கப்படும். இதில் முதல் டேர்ம் தேர்வு நாடு முழுக்க 4-8 வார இடைவெளியில் நடத்த அனுமதிக்கப்படும் (தற்போது நிலவும் கொரோனா பரவலால்). 2022ல் நடக்க உள்ள இரண்டாவது டேர்ம் தேர்வுகள் ஒரே நாளில் நாடு முழுக்க நடத்தப்படும். இதற்கான தேதிகள் பின்னர் சிபிஎஸ்இ மூலம் அறிவிக்கப்படும்.

இன்டர்னல்ஸ்
இதுபோக இன்டர்னல் மார்க்குகளை முடிவு செய்யும் முறை மாற்றப்படுகிறது. இரண்டு டேர்ம் தேர்வு நடந்தாலும், மொத்த கல்வி ஆண்டிற்கு சேர்த்து மொத்தமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்னல் மார்க் முடிவு செய்யப்படும். 3 பீரியட் டெஸ்ட், மாணவர்கள் நடத்தை, பிராக்டிக்கல், புராஜக்ட் என்று பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் இந்த மதிப்பெண் தேர்வு செய்யப்படும்.

எப்போது
இன்டர்னல் மார்க்குகளை இணைய பக்கத்தில் அதிகாரபூர்வமாக பள்ளிகள் பதிவேற்றும் நடைமுறை வரும். இன்டர்னல் மார்க்குகளின் மதிப்பீட்டை தரமாக்க இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்தற்போது எப்போதும் போல ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications